ADVERTISEMENT
மதுரை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை நகரில் ஹிந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. சிலைகள் வைகையாற்றில் கரைக்கப்பட்டன.
ஊர்வலத்தை குருசாமி, இலங்கை யாழ்பாணம் எம்.பி., ஸ்ரீதரன், மட்டகளப்பு முன்னாள் எம்.பி., சீனிதம்பி யோகேஸ்வரன், ஹிந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.
கீழமாசி வீதியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு மாசி வீதிகளில் வழியாக வந்தது. 3 அடி முதல் 10 அடி வரையிலான 25 பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் இடம்பெற்றிருந்தன. ஒரு அடி உயரமுள்ள 100 விநாயகர் சிலைகளை பெண்கள் கையில் ஏந்தியபடி சென்று ஆற்றில் கரைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சோலைகண்ணன், தென்னிந்திய பா.பிளாக் தலைவர் திருமாறன், பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமார், சிறுபான்மையின தலைவர் அப்பாஸ், பாம்பன் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது.
எழுமலை
ஹிந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் சார்பில் எழுமலை சுற்றுவட்டார கிராமங்களில் 23 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!