திடீர் மின்வெட்டால் ரோடு மறியல்
திருமங்கலம் : திருமங்கலம் கீழ உரப்பனூரில் நேற்று மதியம் மூன்று மணி முதல் இரவு 7.45 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் குறைந்த அழுத்த மின்சாரம் காரணமாக பலரது வீடுகளில் டி.வி., பிரிட்ஜ் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் சேதமடைந்தன. இது குறித்து புகார் அளிப்பதற்கு மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் பலமுறை தொடர்பு கொண்ட போதும் யாரும் உரிய முறையில் பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருமங்கலம் செக்கானூரணி ரோட்டில் கற்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருமங்கலம் நகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!