வடமாநில தொழிலாளி கொலையா
வாடிப்பட்டி : சத்தீஸ்கர் மாநில தொழிலாளி கிருஷ்ணா 30. நேற்று காலை வாடிப்பட்டி பேட்டை புதுாரில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீஸ் விசாரணையில் நண்பர்களுடன் பாலமேடு பகுதி போர்வெல் லாரியில் வேலைபார்க்க வந்த கிருஷ்ணாவிற்கு வேலை இல்லை. இதனால் வாடிப்பட்டிக்கு வந்த கிருஷ்ணா நள்ளிரவில் சுற்றி திரிந்ததை சந்தேகித்து சிலர் தாக்கியது தெரியவந்துள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!