திருச்சி தொழிற்சாலைக்கு திருமங்கலம் கழிவுகள்
திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சியில் தினசரி 10 டன் மக்கும் மக்காத குப்பை சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பை திருமங்கலம் பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள மையங்களில் கொட்டி, உலர்த்திய பின் தரம் பிரிக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்தில் சேகரித்த குப்பையில் இருந்து பிரித்த 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் திருச்சி டால்மியாபுரம் சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டன.
தொழிற்சாலையில் உயர் அழுத்த தீயில் குப்பையை எரிப்பதால், வெறும் சாம்பல் மட்டுமே மிஞ்சும். இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு தடுக்கப்படும்.
அதேபோல் திருமங்கலம் நகர் பகுதியில் சேகரிக்கப்பட்ட 2 டன் இளநீர் ஓடுகள் திருமங்கலம் ரயில்வே தண்டவாளத்திற்கான ஸ்லீப்பர் கட்டைகள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன.
ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் சண்முகவேல், சிக்கந்தர், ஜெயசீலன் செய்திருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!