குன்றத்தில் 66 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி
திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றத்தில் 66 விநாயகர் சிலைகளுக்கு போலீசார் அனுமதி அளித்த நிலையில் 2 சிலைகளுக்கு தடை விதித்ததால் அவை வீட்டினுள் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் ஹிந்து முன்னணி, பா.ஜ., சார்பில் கடந்தாண்டு 34 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. இந்தாண்டு 24 இடங்களில் மட்டுமே வைக்க அனுமதிக்கப்பட்டது. அதனால் ஹிந்து முன்னணி, பா.ஜ., அகில பாரத அனுமன் சேனா அமைப்புகளின் நிர்வாகிகள், திரு மதில் பகுதி பொதுமக்கள் சில தினங்களுக்கு முன்பு இரவு சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தற்போது 32 சிலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு சிலைகளும் நிர்வாகிகளின் வீடுகளுக்குள் வைத்து பூட்டப்பட்டுள்ளது. நாளை(செப்., 21) நடக்கும் ஊர்வலத்தில் இந்த சிலைகளும் எடுத்துச் செல்லப்பட்டு செவ்வந்தி குளம் கண்மாயில் கரைக்கப்பட உள்ளது. தவிர அகில பாரத அனுமன் சேனா, இந்து மக்கள் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம், திருநகர், நிலையூர் பகுதிகளில் 34 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இச்சிலைகள் செப்.,22ல் நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!