மாணவர்களுக்கு பேச்சு போட்டி அக்.9, 10ல் நடக்கிறது
சிவகங்கை : சிவகங்கையில், மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் அக்.9, 10ல் நடைபெறும் என தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் நாகராஜன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி வளாக கூட்டரங்கில், தனித்தனியாக மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்படும். சிறப்பு பரிசு ரூ.2,000, சான்று வழங்கப்படும். போட்டி காலை 9:30 மணிக்கு துவங்கும்.
ஆறு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். பள்ளிக்கு ஒரு மாணவர் மட்டுமே அனுமதி உண்டு. போட்டிக்கான தலைப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து தரப்படும். மேலும் விபரம் வேண்டுவோர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை, உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!