Load Image
Advertisement

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த ஆளே இல்லீங்க... சிறப்பு திட்டத்தால் வருவாய்த்துறையில் பணிப்பளு

You are not ready to implement the Womens Entitlement Scheme... Due to the special scheme, the revenue department is burdened    மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த  ஆளே இல்லீங்க...  சிறப்பு திட்டத்தால் வருவாய்த்துறையில் பணிப்பளு
ADVERTISEMENT
மதுரை,மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தனிப்பணியிடம் இல்லாததால் திட்ட செயல்பாடுகளில் தாமதம் ஏற்படலாம் என வருவாய்த்துறை அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அரசு துறைகள் அனைத்துக்கும் தாய் போன்றது வருவாய்த் துறை. அரசின் நலத்திட்டங்கள், சான்றிதழ், பட்டா உட்பட நிலவிவகாரம், சட்டம் ஒழுங்கு என எல்லாவற்றிலும் இவர்களின் பங்கே பிரதானமாக உள்ளது. இதனால் வி.ஏ.ஓ.,க்கள் முதல் மாவட்ட வருவாய் அலுவலர் வரை அதிகாரிகளுக்கு பணிப்பளு அதிகம் உள்ளது.

அரசு செப்.,15 முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக ஒரு மாதத்திற்கு முன்பே அரசின் வருவாய், ஊரக வளர்ச்சி, கூட்டுறவு என பல்துறைகளும் முடுக்கிவிடப்பட்டு பணியாற்றினர். விண்ணப்ப படிவங்களை வீடுவீடாக வழங்குதல், பூர்த்தி செய்து பெறுதல், அவற்றை பதிவேற்றம் செய்தல் பணிகள் நடந்தன. இதனால் வருவாய் உட்பட மேற்கண்ட துறைகளில் வழக்கமான பணிகள் பாதித்தன.

முதல்வரின் கனவு திட்டமாக விளங்கும் இதனை நடைமுறைப்படுத்த போதுமான ஆட்கள் இல்லை என வருவாய்த்துறையினர் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கு தற்போது மாவட்ட அளவில் 2 தாசில்தார், ஒரு ஆர்.ஐ., ஒரு இளநிலை உதவியாளர் என்ற அளவிலேயே 'அயற்பணி'யாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆர்.டி.ஓ., தாலுகா அளவில் நியமனம் இல்லை. ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரிகளுக்கு சமீபகாலமாக நீதிமன்ற அளவில் இருந்த பிறப்பு, இறப்பு சான்றளித்தல், தனிப்பிரிவாக செயல்பட்ட நிலச்சீர்திருத்தம், இத்திட்டத்தின் மேல்முறையீடு அதிகாரி என பணிப்பளு அதிகரித்துள்ளது.

தாலுகா அளவிலும் பல்வேறு நலத்திட்டங்களை அதிகாரிகள் செயல்படுத்துவதால் கூடுதல் பணிப்பளு உள்ளது. இதனால் இத்திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு நிலையிலும் புதிய பணியிடங்களை நியமிக்க அவசியம் உள்ளது. தாலுகா, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் தலா ஒரு தாசில்தார், 2 ஆர்.ஐ.,க்கள், நியமிக்கலாம். மாவட்ட அலுவலகத்திலும் துணை கலெக்டர் அளவில் தனிப்பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் முருகையன் கூறுகையில், ''பிற மாநிலங்களுக்கும் முன்னோடி திட்டம் இது. முதல்வரின் கனவு திட்டமான இதற்கு தனி பணியிடம் போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் வேலைப்பளுவால் செயல்பாடுகளில் தாமதம் ஏற்படலாம். இதுபோன்ற சிறப்பு திட்டங்களான இலவச 'டிவி', மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் திட்டங்களுக்கு தனிப்பணியிடம் ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து முதல்வர், அமைச்சர் அளவில் ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement