Load Image
Advertisement

இண்டியா கூட்டணியை உடைக்க தந்திரமா?

 Is India a trick to break the alliance?  இண்டியா கூட்டணியை உடைக்க தந்திரமா?
ADVERTISEMENT
சென்னை: அ.தி.மு.க., -- பா.ஜ., மோதல், 'இண்டியா' கூட்டணியை உடைக்கும் தந்திரமாக இருக்குமோ என்ற சந்தேகம், காங்கிரஸ், தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த, 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி அமைத்தது. இந்த இரு தேர்தல்களிலும் தோல்வி தான் கிடைத்தது. 'பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்ததால், சிறுபான்மையினர் ஓட்டுகள் முழுமையாக, தி.மு.க.,வுக்கு சென்று விட்டன. இதுவே தோல்விக்கு காரணம்' என, முனுசாமி, சி.வி.சண்முகம், செல்லுார் ராஜு போன்ற, அ.தி.மு.க., முக்கிய தலைவர்கள் வெளிப்படையாக பேசினர்.

இதனால், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு சுமூகமானதாக இல்லை; 2021 ஜூலையில் அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவரானதும் நிலைமை இன்னும் மோசமானது. அண்ணாமலைக்கும், அ.தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்களான ஜெயகுமார், சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் இடையே, அவ்வப்போது வார்த்தை போர் வெடித்தது.
தற்போது இது, உச்சத்தை அடைந்து, கூட்டணி முறியும் அளவுக்கு சென்றுள்ளது.

இம்மாதம், 15ம் தேதி புதுடில்லியில், அமித்ஷாவை பழனிசாமி சந்தித்த பின், அ.தி.மு.க., -- பா.ஜ., இடையே மோதல் தீவிரமாகி இருப்பது, பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது, 'இண்டியா' கூட்டணியை உடைக்கும் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்குமோ என்ற சந்தேகம், காங்கிரஸ், தி.மு.க.,வினருக்கு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:பா.ஜ.,வுக்கு எதிராக, 28 கட்சிகள் இணைந்து, 'இண்டியா' கூட்டணியை அமைக்கும் என, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் எதிர்பார்க்கவில்லை. இண்டியா கூட்டணியில் உள்ள சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க பார்த்தனர்; அதுவும் நடக்கவில்லை. இந்தச் சூழலில் தான் பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என, அ.தி.மு.க., அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், கூட்டணி குறித்து, தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப் போவதாகவும் கூறுகிறது. பா.ஜ., இல்லாவிட்டால், தி.மு.க., கூட்டணியில் உள்ள சில கட்சிகள், அ.தி.மு.க., பக்கம் வரலாம் என, பழனிசாமி எதிர்பார்க்கிறார். இதனால், 'இண்டியா' கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முடியும் என இரு கட்சிகளும் திட்டமிட்டு, காய்களை நகர்த்துவதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (17)

 • M Ramachandran - Chennai,இந்தியா

  என்ன குழப்பம் அந்த கூட்டணியென ஒரு குழப்பவாதிங்கள் நிறைந்த கூட்டணி இப்போ கம்யூஸ்ட்கள் விலகி விட்டார்கள் ஆம் ஆத்மீயும் விலகி விடும் நிதிஷ் குமாரும் ராகுலுவும் கூட்டணி தீ மு க்கா அதன் லூஸ் ட்டாக்கால் ஓரம் கட்டி விட்டார்கள்

 • கனோஜ் ஆங்ரே - மும்பை,இந்தியா

  தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி..ன்னு ஒண்ணு கிடையாதே...? கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்த அதே கூட்டணிக் கட்சிகள்தான் திமுக...வில் இருக்கிறது. அதுலந்து ஒண்ணுத்தக்கூட ஆணியே புடுங்க முடியாது... வேணும்னா, ராமதாசை பக்கத்துல வச்சிக்கோங்க... ரொம்ப ராசியானவரு...?

 • குமரி குருவி -

  தவளை தன் வாயால் கெடும் என்பது போல் அவர்களே. வாயால் கெட்டு போவார்கள்சான்று தி.மு.கஉதயநிதி

 • duruvasar - indraprastham,இந்தியா

  திமுக நிர்வாகி கருத்து சொல்வதற்க்குமுன் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் இதுநாள் வரை கூட்டணி வைக்காமல் தனித்து நின்று எந்த தேர்தலிலும் திமுக ஜெயித்ததில்லை. எனவே கூட்டணி உடைந்தால் திமுகவுக்கு போனி ஆகாது என்ற பயத்தின் காரணமாக கருத்து என்ற போர்வையில் விடப்படும் உதார். பேடிகள்.

 • ராஜா -

  அதுவே உடைஞ்சு போயிரும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்