Load Image
Advertisement

பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி தீர்த்தவாரி 10 நாள் விழா நிறைவு

 The 10-day festival of Chaturthi Theerthavari has concluded at Pilliyarpatti    பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி தீர்த்தவாரி 10 நாள் விழா நிறைவு
ADVERTISEMENT
பிள்ளையார்பட்டி :சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா 10ம் நாளான நேற்று காலை தீர்த்தவாரி நடந்தது. இதையடுத்து விநாயகருக்கு முக்கூறுணி மோதக படையல், ஐம்பெரும் கடவுளர் வீதி உலாவுடன் சதுர்த்தி விழா நிறைவடைந்தது.
இக்கோயிலில் சதுர்த்தி பெருவிழா செப்.,10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 8 ம் நாள் வரை தினமும் காலை வெள்ளி கேடகத்தில் உற்ஸவர் புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. செப்.,15ல் கஜமுக சூரசம்ஹாரமும், செப்.,18ல் தேர் வடம் பிடித்தலும், மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரமும் நடந்தது.
10ம் திருநாள் தீர்த்தவாரியை முன்னிட்டு உற்ஸவர் தங்க மூஷிக வாகனத்தில் கோயில் குளம் வடக்கு படித்துறையில் எழுந்தருளினார். தொடர்ந்து அங்குசத்தேவருக்கு படித்துறையில் தலைமை குருக்கள் பிச்சை சிவாச்சார்யார் தலைமையில் சிவாச்சார்யார்கள் பூஜை, தீபாராதனை நடத்தினர். பின்னர் காலை 11:30 மணியளவில் சோமசுந்தரம் குருக்களால் அங்குசத்தேவருக்கு குளத்தில் தீர்த்தவாரி
நடந்தது. மதியம் 1:30 மணி அளவில் மூலவருக்கு முக்கூறுணி மோதகம் படையலிடப்பட்டது. இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவுடன் விழா நிறைவடைந்தது.
விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி பழ.கரு.லெ.ராம.சா.தண்ணீர்மலை மற்றும் காரைக்குடி முரு.வீர.சா.க.சாமிநாதன் செய்தனர். இரு நாட்களாக பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement