Load Image
Advertisement

‛ ஆதாரம் இருந்தால் காட்டுங்க சவுத்ரி: லோக்சபாவில் சீறிய அமித் ஷா

 If you have evidence, show it Chaudhry Amit Shah was furious in the Lok Sabha   ‛ ஆதாரம் இருந்தால் காட்டுங்க சவுத்ரி: லோக்சபாவில் சீறிய அமித் ஷா
ADVERTISEMENT
புதுடில்லி: லோக்சபாவில் நேற்று காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இடையே காரசார விவாதம்நடந்தது.

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, காங்கிரசைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது:

ராஜிவ், நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் தலைமையிலான காங்., அரசுகள், இந்த மசோதாவை நிறைவேற்ற முயன்றன. லோக்சபாவில் சில நேரங்களில் நிறைவேற்றப்பட்டாலும், ராஜ்யசபாவில் நிறைவேற்ற முடியவில்லை.

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளது. இதை சுட்டிக்காட்டி, பிரதமருக்கு சோனியா கடிதமும் எழுதி உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதிலடி கொடுத்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் ஒருபோதும் நிறைவேறவில்லை. மேலும், பழைய மசோதா நிலுவையிலும் இல்லை. 2014ல், 15வது லோக்சபா கலைக்கப்பட்டவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது.

சபையில் கூறியதை நிரூபிக்க ஏதேனும் ஆதாரம் இருந்தால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அவரது பேச்சை சபைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (6)

  • இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா

    இப்போ நம்ம விடியல் ஆட்சியாளரின் கவலை எல்லாம் எப்படி இதை செயல் படுத்துவது என்பது தான். அவ்வளவு இடங்களை பெண்களுக்கு கொடுத்து விட்டால் மற்றவர்கள் எப்படி சரி செய்வது

  • duruvasar - indraprastham,இந்தியா

    திராவிட உருட்டுக்களுடன் காங்கிரஸ் போட்டியிட முடியாது. உதாரணம் ஐ நா சபையின் தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் பட்டம். ஈரோடு ராமசாமி நாயக்கன் பிறந்தபின் தான் தமிழன் கோவணம் கட்டிய வரலாறு

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    நேரு அல்லது இந்திரா பெயரை பேச்சில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால் இவர்களுக்கு தூக்கமே வராது.

    • Barakat Ali - Medan,இந்தோனேசியா

      காங்கிரஸ் கம்பெனியின் பிராண்ட் நேம்ஸ் .....

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இந்த கான்க்ரோஸ் கயவர்கள் எல்லாவற்றையும் அவர்கள் செய்ததாக பொய்ச்சொல்லி கூவுவார்கள். இவர்கள் செய்ததெல்லாம் இந்தியாவை சர்வநாசம் செய்தது, கொள்ளை அடித்தது.

    • Justin Jose - chennai,இந்தியா

      அமித் ஷா மாதிரி நீங்களும் கோமோவில்தான் இருந்துள்ளீர்கள் போலும் ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement