மின் வாரிய தலைவருடன் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
சென்னை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில், மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானியை, மின் வாரியத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களும், நேற்று மாலை சந்தித்து பேசினார்.
தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த, 2019 டிச., முதல் நிலுவையில் இருந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம், இந்தாண்டு மே மாதம் கையெழுத்தானது. அதில், 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. நிலுவை தொகையாக, 2019 முதல் இந்தாண்டு மார்ச் வரை மாதம், 500 ரூபாயும்; கடந்த ஜூலை முதல், 6 சதவீத ஊதிய உயர்வை வழங்குவதாகவும் நிர்வாகம் அறிவித்தது.
இதுவரை, நிலுவை தொகை வழங்கப்படவில்லை. மின் வாரிய தலைவரை சந்தித்து, அந்த தொகையை விரைந்து வழங்குவதுடன், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த ஊழியர் நியமனத்தை திரும்ப பெற வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. புதிய மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு கூறினர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!