Load Image
Advertisement

லோக்சபா தேர்தலுக்கு தயாராக ஏற்பாடு அ.தி.மு.க.,  அணி நிர்வாகிகள் நியமனம்

திருப்பூர்:லோக்சபா தேர்தல் பணிகளை மேற்கொள்ள வசதியாக மாநகர பகுதிகளில் 9 அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்க அ.தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது.

விரைவில் லோக்சபா தேர்தல் வர இருப்பதால் அ.தி.மு.க.வில் 'பூத் கமிட்டி' அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. 'பூத்' வாரியாக தகவல் தொடர்பு அணியும் மகளிர் அணியும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதுதவிர நகராட்சி பகுதி நிர்வாகிகள் நியமனத்தை அக். 5ம் தேதிக்குள் முடிக்க கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் ஒன்பது அணிகளுக்கான நிர்வாகிகள் நியமன பணி வேகமெடுத்துள்ளது.

பகுதி அளவில் எம்.ஜி.ஆர். மன்றம் இளைஞரணி மகளிர் அணி இளைஞர் இளம்பெண்கள் பாசறை இலக்கிய அணி மாணவர் அணி தொழிற்சங்கம் தகவல் தொடர்பு அணி ஜெ. பேரவை அணிகளின் நிர்வாகிகள் நியமனம் நடக்க உள்ளது.

இது குறித்து அ.திமு.க. நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

மாநகராட்சி பகுதி வாரியாக 9 அணிகளுக்கும் தலைவர் செயலர் உட்பட ஒன்பது பேர் கொண்ட குழு நியமிக்கப்படும்.

ஒவ்வொரு பகுதியிலும் ஒன்பது அணி நிர்வாகிகள் இதர பொறுப்பாளர்கள் என 100 பேர் இருப்பர். ஒரு பகுதியில் 100 பேர் அடங்கிய குழு தேர்தல் பொதுக்கூட்டம் பிரசாரம் போன்ற பணியை மேற்கொள்ள வசதியாக இருக்கும். அக். 5ம் தேதிக்குள் உத்தேச பட்டியலை அனுப்பி வைக்க தலைமை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement