திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் நீட்டிப்பு
சென்னை:திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையேயான, வாராந்திர சிறப்பு ரயில்களை, நவம்பர், 27 வரை நீட்டித்து, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு:
கோவை, மேட்டுபாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்களில் பயணியர் கூட்டம் அதிகமாக இருப்பதால், சேவையை நீட்டிக்க வலியுறுத்தப்பட்டது. அதன்படி, நவம்பர், 27 வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
திருநெல்வேலியில் இருந்து, அக்., 1, 8, 15, 22, 29 மற்றும் நவ., 5, 12, 19, 26ம் தேதிகளில், இரவு 7:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 7:30 மணிக்கு, மேட்டுப்பாளையம் சென்றடையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து, அக்., 2, 9, 16, 23, 30 மற்றும் நவ., 6, 13, 20, 27ம் தேதிகளில், இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை, 7:45க்கு திருநெல்வேலி சென்றடையும்.
டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. தென்காசி, சிவகாசி, மதுரை, பொள்ளாச்சி, கோவை வழியாக, இந்த ரயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வே கேட்களை அகற்றி, அங்கு பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தெற்கு ரயில்வேயில் தற்போது, 35 இடங்களில் மேம்பால பணி, 110 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!