ADVERTISEMENT
ஓசூர்:ஹிந்து, முஸ்லிம்கள் இணைந்து, தேன்கனிக்கோட்டையில் சதுர்த்தி விழா கொண்டாடியதுடன், இரு தரப்பினரும் இணைந்து ஊர்வலமாக சென்று, சிலை விசர்ஜனம் செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை கிசான் தெருவில், ஹிந்து, முஸ்லிம் இளைஞர்கள், பொதுமக்கள் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினர்.
இதன்படி, விநாயகர் சிலை அமைத்து வழிபட்டனர். சிலையை நேற்று ஊர்வலமாக எடுத்துச் சென்று, தேவராஜன் ஏரியில் விசர்ஜனம் செய்தனர்.மேள, தாளம் முழங்க நடந்த விசர்ஜன ஊர்வலத்தில் முஸ்லிம்கள் திரளாக பங்கேற்றனர். விநாயகர் அனைவருக்கும் பொதுவானவர். ஹிந்து, முஸ்லிம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், முதல் ஆண்டாக இப்பகுதியில் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (5)
இது மாதிரி நடந்தால், போதும் தி மு க, மற்றும் மத்த கட்சிகளுக்கு வியாபாரம் இருக்காது.. அவங்க தொழில் அழிந்து விடும்.. இது போல் நடக்க இறைவனிடம் வேண்டுவோம்
இதை பார்த்து திமுகவினருக்கு வயிறு எறியும் .
இதெல்லாம் எதுக்கு? அவங்க இந்து இளைஞர்களை லவ் ஜீகாத் பண்ணாம தங்களோட சமுதாயத்துக்குள்ளயே மணம் முடித்தாலே போதுமானது
இங்க இந்து பண்டிகைகளிலும் கலந்துகிட்டு தேர்தலில் இந்துக்களுடன் சேர்ந்து வாக்களிக்காமல் சிறுபான்மைகளை ஆதரிப்பதாக சொல்லும் கட்சிகளுக்கு மத ஓட்டுக்களை மொத்தமாக போடுவானுக.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வீதியோரங்களில் பந்தல் போட்டு விநாயகர் சிலைகளை கொண்டு வந்து வைக்க சிலை ஒன்றுக்கு ஒரு நாள் வாடகை ரூ 101.00 வசூலிக்கிறார்கள்.இது போல் சிறுபான்மை மக்களின் பண்டிகைகளில் கட்டணம் வசூலிப்பதில்லை. கணக்கில் வராத பணம்.