Load Image
Advertisement

டெங்கு அதிகரிக்க காரணம் என்ன

சென்னை:நீர்வழித்தடங்களை துார்வாரி அங்கிருந்த கொசுக்களை நீர்வளத்துறையினர் விரட்டியது தான் டெங்கு பரவுவதற்கு காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு கடலுார் மாவட்டங்கள் வடகிழக்கு பருவமழையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

இந்த மாவட்டங்களில் வெள்ள சேதங்களை தவிர்க்க பருவமழைக்கு முன்பாக அடையாறு கூவம் வெள்ளாறு கொசஸ்தலையாறு பகிங்ஹாம் கால்வாய் ஓட்டேரி நல்லா அரும்பாக்கம் - விருகம்பாக்கம் கால்வாய் புழல் ஏரி உபரிநீர் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் துார் வாரப்படுகிறது.

இப்பணிக்கு நடப்பு ஆண்டு 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதி வாயிலாக நீர்வழித் தடங்களில் இருந்த புதர்கள் செடி கொடிகள் ஆகாய தாமரை திட மற்றும் திரவ கழிவுகள் அகற்றப்படுகின்றன.

இதனால் இவற்றில் பதுங்கியிருந்த கொசுக்கள் ஊருக்குள் படையெடுத்து வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகள் தண்ணீர் தேங்கும் இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளன. அடர்த்தியான மரம் செடி கொடிகளிலும் பதுங்கியுள்ளன.

பகல் நேரங்களில் கொசுக்கள் வேலையை காட்டுவதால் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே குடியிருப்பு பகுதிகளுக்குள் முகாமிட்டுள்ள கொசுக்களை ஒழிப்பதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் காலங்களில் நீர்வழித்தடங்களை துார் வாருவதற்கு முன் கொசு ஒழிப்பு பணிகளை துவங்க வேண்டும். அப்போது தான் கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும்.

இதற்கு மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நீர்வளத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement