Load Image
Advertisement

சூரியனார் கோயில் ஆதினத்திடம் விளக்கம் கேட்டு கடிதம்

மயிலாடுதுறை:தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோயில் ஆதினமாகமகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் 2022 ஜனவரி முதல் 28வது குரு மகா சன்னிதானமாக உள்ளார்.

முன்னதாக இவர் மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறையில் அமைந்துள்ள பழமையான ஆதினத்தின் கட்டளை தம்பிரானாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் திருவாவடுதுறை ஆதினம் சார்பில் சூரியனார் கோவில் ஆதின குருமகாசன்னிதானம் மகாலிங்க தேசிகர் பரமாச்சாரியார் சுவாமிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தாங்கள் சூரியனார் கோவில் குரு மகா சன்னிதானமாக பொறுப்பேற்ற பின் சூரியனார் கோவில் ஆதின மரபுகள் திருவாவடுதுறை ஆதின கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வருகிறீர்கள்.

திருவாவடுதுறை ஆதினத்திற்கும் தேசத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சுதந்திர செங்கோல் பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது ஆதினத்தில் குற்ற பின்னணி உடையவர்களை தங்க வைத்திருப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளீர்கள்.

தனி மனித ஒழுக்கம் விதிமுறைகள் மீறப்பட்டது தெரிய வருகிறது. இவை ஆதின விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. ஒழுக்க நெறிகளை கடைப்பிடித்து பணிகளை தொடர அறிவுறுத்தியும் மேற்படி புகார்கள் குறித்து பலமுறை விளக்கம் கேட்டும் இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை. நடவடிக்கைகளும் சரி செய்து கொள்ளப்படவில்லை.

சூரியனார் கோவில் ஆதின பொறுப்பில் தொடர தகுதியற்ற நபராக இருந்து வருகிறீர்கள். மேற்கண்ட காரணங்களால் உங்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆதினகர்தர் பதவியில் இருந்து ஏன் நீக்கம் செய்யக்கூடாது என்பதற்கான விளக்கத்தை இந்த அறிவிப்பு பெற்ற 15 தினங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.தவறும் பட்சம் சமாதானம் கூற எதுவும் இல்லை என கருதி ஆதின விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடித நகல் சென்னை ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement