சங்கமம் - நம்ம ஊரு திருவிழா விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை:'சங்கமம் - நம்ம ஊரு திருவிழா'வில் பங்கு பெற விரும்பும் கலைக்குழுக்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற பெயரில் நாட்டுப்புறக் கலை விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு கோவை, தஞ்சாவூர், வேலுார், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில், அடுத்த மாதம் முதல் டிசம்பர் வரை விழா நடத்தப்பட உள்ளது.
ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள் இடம் பெறும் வகையில், பிரமாண்ட சங்கமம் - நம்ம ஊரு திருவிழா, சென்னையில் பல்வேறு இடங்களில், தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்பட உள்ளது.
இக்கலை விழா வழியாக, 2,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பயன்பெறுவர். இவ்விழாவில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பத்தை, www.artandculture.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கலை பண்பாட்டுத்துறை மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு, அக்.,6க்குள் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்துடன், கலைக் குழுக்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில், ஐந்து நிமிட வீடியோவை, 'சிடி' அல்லது 'பென் டிரைவில்' பதிவு செய்து அனுப்ப வேண்டும்.
கலை பண்பாட்டுத் துறை அமைத்துள்ள தேர்வுக்குழு, தகுதியான கலைஞர்களை தேர்வு செய்யும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!