Load Image
Advertisement

கல்லணை கால்வாய் புனரமைப்பு ரூ.1603 கோடி உதவி எதிர்பார்ப்பு

சென்னை:கல்லணை கால்வாய் புனரமைப்பு பணிகளுக்கு, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம், 1,603 கோடி ரூபாய் நிதியுதவி எதிர்பார்த்து, நீர்வளத் துறையினர் காத்திருக்கின்றனர்.

தஞ்சாவூர் கல்லணையில் துவங்கும் கல்லணை கால்வாய், 148 கி.மீ., பயணித்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் முடிகிறது. இதன் வாயிலாக, 2.27 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.இந்த கால்வாய் வாயிலாக, 636 கிளை கால்வாய்களுக்கும், 694 ஏரிகளுக்கும் நீர் செல்கிறது. கல்லணை கால்வாய் வாயிலாக வினாடிக்கு 4,200 கன அடி நீரை வெளியேற்ற முடியும். முறையான பராமரிப்பின்மை காரணமாக, கல்லணை கால்வாய் நீர் கடத்தும் திறன் குறைந்து உள்ளது.

இதை, 2,639 கோடி ரூபாய் மதிப்பில், மாநில அரசு மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி நிதியுதவியுடன், புனரமைக்கும் பணிகள், 2021 பிப்ரவரியில் துவங்கின. மொத்தம், 16 தொகுப்புகளாக பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு, ஐந்து தொகுப்புக்கான பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இதற்கு மாநில அரசு, 1,036 கோடி ரூபாயை செலவழித்து உள்ளது.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் இருந்து, 1,603 கோடி ரூபாய் இன்னும் கிடைக்கவில்லை.

இந்த நிதியை எதிர்பார்த்து, திருச்சி மண்டல நீர்வளத்துறையினர் காத்திருக்கின்றனர். மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வாயிலாக, நிதியை பெற முயற்சிகள் துவங்கியுள்ளன.


வாசகர் கருத்து (1)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    அதை ரவுண்டா ரூபாய் 1600 கோடி என்று அறிவிக்க முடியாதா? கொள்ளையடிக்கணுமுன்னா இப்படி பிசிராக (ரூபாய் 1603 கோடி) என்று அறிவித்தால்தான் மக்களுக்கு சந்தேகம் வராது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement