Load Image
Advertisement

அடிச்சா திருப்பி அடிப்போம்!: நம் அதிகாரியை வெளியேற உத்தரவிட்ட கனடா அரசுக்கு மத்திய அரசு பதிலடி

Central Government condemns Canadian officers exit: Retaliation for action against our officer   அடிச்சா திருப்பி அடிப்போம்!: நம் அதிகாரியை வெளியேற உத்தரவிட்ட கனடா அரசுக்கு மத்திய அரசு பதிலடி
ADVERTISEMENT
புதுடில்லி: காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில், இந்திய அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறிய குற்றச்சாட்டை மத்திய அரசு கடுமையாக மறுத்துள்ளது. அங்குள்ள இந்திய துாதரக அதிகாரியை வெளியேற உத்தரவிட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கனடா அதிகாரியை, ஐந்து நாளில் இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக்கும் முயற்சியில், காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள சில சீக்கிய அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

கனடாவில், 7.70 லட்சம் சீக்கியர்கள் வசிக்கின்றனர். அந்த நாட்டு மக்கள் தொகையில் இது, 2 சதவீதம். காலிஸ்தான் ஆதரவு சீக்கிய பயங்கரவாத அமைப்புகள், கனடாவில் இந்தியாவுக்கு எதிராகவும், இந்தியர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

இந்தியா கவலை



ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர். காலிஸ்தானுக்கு ஆதரவாக, இந்தியாவுக்கு எதிராக பேரணியும் நடத்தினர். மேலும், கனடாவில் உள்ள இந்திய துாதரகம் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்திய துாதரக அதிகாரிகளுக்கு மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதையடுத்து, இந்தியா, கனடா இடையேயான உறவில் உரசல் ஏற்பட்டது. இந்நிலையில், புதுடில்லியில் கடந்த, 9 - 10ம் தேதிகளில் நடந்த 'ஜி - 20' அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வந்திருந்தார்.

கடந்த, 10ம் தேதி அவரை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, காலிஸ்தான் பயங்கரவாத பிரச்னை தொடர்பாக இந்தியாவின் கவலையை பிரதமர் மோடி தெரிவித்தார். அந்த அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கடுமையுடன் குறிப்பிட்டார். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் பாதிக்கப்பட்டது.

நீண்டகாலமாக நடந்து வந்த, இரு தரப்பு தாராள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக, கனடா சமீபத்தில் அறிவித்தது. இதற்கிடையே இந்தியாவால் தடை செய்யப்பட்ட, 'காலிஸ்தான் டைகர் போர்ஸ்' என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், 45, கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

போலீசார் விசாரணை



கனடாவில் பிறந்த, கனடா குடியுரிமை பெற்று உள்ள அவர், மேற்கு கனடாவில் உள்ள சுர்ரே பகுதி யில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கனடா பார்லிமென்டில் நேற்று முன்தினம் நடந்த விவாதத்தின்போது, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தினர். இந்த படுகொலையில், இந்திய அரசின் ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலானி ஜோலி, ''இந்த விவகாரத்தில், இந்தியாவின் உயரதிகாரியை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, குறிப்பிட்டார். கனடாவில் உள்ள, 'ரா' அமைப்பின் தலைவர் பவன் குமார் ராயை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக, கனடா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு, நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

வெளியுறவுத் துறை நேற்று கூறியுள்ளதாவது: கனடா பிரதமர் ட்ரூடோவின் பேச்சு, ஆதார மற்றது, உள்நோக்கம் உடையது. பயங்கரவாதத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், அவற்றுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்தியா அமைதியை விரும்பும், உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடு. மற்ற நாடுகளின் விவகாரத்தில் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் கனடா அரசு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது. பயங்கரவாதத்தை ஆதரிப்பது அந்த நாட்டுக்கே ஆபத்தாக முடியும்.இவ்வாறு வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கான கனடா துாதர் கேமரூன் மெக்கேயை, நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று நேரில் ஆஜராக உத்தரவிட்டது. அவரிடம், இந்தியாவில் உள்ள கனடாவின் உயரதிகாரி ஒருவரை, ஐந்து நாட்களுக்குள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆதரவு!

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்த சமரசமும் செய்யக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. நம் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடுக்கு கேடு விளைவிக்கும் எதையும் சகித்து கொள்ள முடியாது. நம் நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் காங்., உறுதியாக உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவை அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- ஜெயராம் ரமேஷ், பொதுச் செயலர், காங்கிரஸ்



அமெரிக்கா கவலை


அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரின்னே வாட்சன் கூறுகையில், ''இந்தியாவுக்கு எதிராக கனடா அரசு கூறியுள்ள குற்றச்சாட்டுகள் துரதிர்ஷ்டவசமானவை. இது மிகவும் கடினமான ஒரு விஷயம். இந்த விஷயத்தில் கனடா அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும்,'' என்றார்.



கோபமாக வெளியேறிய அதிகாரி


கனடா அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அந்த நாட்டின் துாதர் கேமரூன் மெக்கேவுக்கு, நம் வெளியுறவு அமைச்சகம் 'சம்மன்' அனுப்பி இருந்தது. இதையடுத்து, டில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்துக்கு வந்த அவரிடம், கனடா அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், கனடா அதிகாரி ஒருவரை ஐந்து நாட்களுக்குள் வெளியேற்றும் படியும் அறிவுறுத்தப்பட்டது. இந்த சந்திப்பு முடிந்ததும் வேகமாக வெளியில் வந்த கேமரூன் மெக்கேவிடம், பத்திரிகையாளர்கள் சில கேள்விகளை கேட்டனர். ஆனால், அவர்களது கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து அவர், கோபத்துடன் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.




இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து பதற்றத்தை உருவாக்க விரும்பவில்லை. காலிஸ்தான் விவகாரத்தில், எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவதற்கும், சரியான செயல்முறைகள் இருப்பதை உறுதி செய்வதற்கும். இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறோம். இருப்பினும், இந்த விஷயத்தை மிகுந்த தீவிரத்துடன் இந்திய அரசு கையாள வேண்டும்.

- ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர், கனடா



வாசகர் கருத்து (4 + 70)

  • Devan - Chennai,இந்தியா

    இந்த தீவிரவாதிகளுக்கு காலிஸ்தான் தான் வேண்டும் என்றால் கனடாவையே காலிஸ்தானாக மாற்றிக் கொள்ளட்டம்.

  • Nallashami - Coimbatore,இந்தியா

    கனடா... தற்போது இந்திய தேசவிரோதிகளின் கூடாரமாகி விட்டது.. பாகிஸ்தானைப்போல இதுவே அந்த நாட்டின் அழிவுக்கு காரணமாக இருக்கும்..

  • Arul Narayanan - Hyderabad,இந்தியா

    காங்கிரஸ் கட்சி ராகுலை எச்சரித்து வைக்க வேண்டும். அவர் கனடாவை ஆதரித்து அறிக்கை விட்டு விடுவார்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    தீவிரவாதிக்கு குடியுரிமை கொடுத்தது சர்வதேச சட்டதிட்டங்களுக்கு எதிரானது.

கனடா உயர் அதிகாரியை வெளியேற்றியது இந்தியா (47)

  • Ganesh - Chennai,இந்தியா

    கண்மூடி தனமாக நம்பும் சங்கிகள் இருக்கும் இந்த நாட்டில் வல்லரசாக முடியாது

    • ராஜா - ,

      சரி வல்லரசாக உன்னிடம் என்ன திட்டம் உள்ளது சொல் கேட்போம்!? கோடி கோடியாக சுருட்டி வெளிநாடுகளில் பதுக்கினால் வல்லரசு ஆகி விடுவோமா!?

  • DR Sanaathan Rakshak Sanga Nadar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    ராகுல் சமீபகாலமாக அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் பயணம் மேற்கொண்டு அங்குள்ள பிரிவினை வாதிகளை சந்தித்தது பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதன் விளைவாகவே விவகாரங்கள் நடந்து உள்ளன. எப்படியாவது மோடிஜி தலைமையிலான அரசை வீழ்த்தி குறுக்குவழியில் பிரதமராக கனவு கண்டு உள்ளார். இது ஒருபோதும் நடக்காது

  • சிந்தனை -

    ஜய் பாரதி! ஜய் பாரத்!!

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    பாகிஸ்தானைப் போலவே கனடாவும், பிரிட்டனும் இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதிகளையும், இடது சாரி அரசியல்வாதிகளையும் ஆதரித்து வருகின்றன. பாரதம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • Sathyam - mysore,இந்தியா

    Whenever Khalistanis talk to the Canadian government about terrorism, they give a rotten answer, we have freedom of expression here.There is freedom to protest peacefully here. However, ly supporting terrorism in the name of FOE is not democracy. Let us understand this with an example, Canada's The largest terrorist attack in history was the 1985 Air India Kanishka bombing, in which 329 people were killed, 268 of whom were Canadians, and most of them They were Punjabi people. The main conspirator of this terrorist incident was Talwinder Singh Parmar, who funded this attack, arranged bombs, hired hijackers.Did this, bought air tickets, made arrangements for accommodation and food for the terrorists. The Canadian government convicted him, the investigating agencies there convicted him, the court there Convicted. He was later brought to India and died fighting with the Punjab Police in 1992. Even today in Canada, 'Shaheed Bhai Talwinder Singh Parmar' is celebrated every year on 25 June.A car rally is held in his honour. This is the condition of their FOE. Can a rally be held in honor of Osama in America? Was Hitler martyred in Israel or Germany? Can a car rally be organized in his honor? It cannot happen, but it happens in Canada, the government there ly supports terrorism in the name of freedom.

  • karupanasamy - chennai,இந்தியா

    டுரூடோ பதவியைக்காப்பாற்றிக்கொள்ள தீவிரவாதத்தை ஆதரிக்கும் முட்டாள்.

  • Balamurugan - Andipatty,இந்தியா

    இப்போதுதான் இந்தியா மொசாட் பாணியை கையில் எடுத்துள்ளது . தீவிரவாதிகளுக்கு அவர்கள் பாஸையில் பேசினால் தான் பிடிக்கும் போலிருக்கிறது.

    • KC Arun - Tirunelveli,இந்தியா

      இல்லை நண்பா. கடந்த ஐந்து வருடங்களாக நம்மை குறைவாக எல்லாவிதத்திலும் பேசும் எல்லா நாடுகளுக்கும், அதே பிரச்சனையை அவர்களுக்கு எதிராக இந்தியா திருப்பி செய்கிறது. அதனால் பத்து வருடங்களுக்கு முன்பு நம்மை பேசுவது நடத்துவது போன்று இப்போது நம்மை பேச, நம்மால் திருப்பி அடிக்கப்பட்ட நாடுகள் பயப்படுகிறது. உதாரணமாக, கோவிட் காலத்தில் இங்கிலாந்து, நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பு ஊசி மருந்தை செலுத்தியவர்களை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. நம் அரசு சொல்லிப்பார்த்தும் திமிராக பேசினார்கள். அவர்கள் மருந்தையும், மக்களையும் இந்தியாவுக்குள் வர தடை போட்டது நம் அரசு. அடுத்த நாளே பல்டி அடித்தது இங்கிலாந்து. இப்போது நம்மை எப்படி நடத்துகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இது போல தான் மலேசியா, துருக்கி, சீனா என அனைத்திற்கும் திருப்பி அடிக்கிறது இந்தியா..

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    தீவிரவாத நடவடிக்கையை கன்னட மண்ணிலிருந்து செய்ய முடிகிறது என்றால் கனடாவும் தீவிரவாத ஆதரவு நாடுதான்.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    இந்தியாவிற்கு எதிராக, போஸ்டர் ஓட்டுதல், போராட்டம் நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தது. - இது பயங்கரவாத செயலாச்சே.

    • N SASIKUMAR YADHAV - ,

      உங்க பாஷையில் சொல்வதென்றால் குண்டுப்போடுவது மட்டுமே பயங்கரவாத செயல்

    • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

      என்ன ஜெய் சிலிண்டர் வெடித்தால் குற்றமில்லை என்று கூறியவர்கள் ஆண்டுகொண்டிருக்கும் மாநிலத்தில் இருந்து இப்படித்தான் சவுண்டு கொடுப்பீங்க

  • morlot - Paris,பிரான்ஸ்

    There are many tamil srilankan people are working there also he is celebrating our pongal and deepavali feasts with tamils

  • நல்லவன் - chennai,இந்தியா

    நம்மதான் நாட்டோட பெயரை மாத்திடபோரமே, அவேக இந்தியாவைத்தனே சொல்லுதாங்க. சொல்லட்டுமே என்ன ஆச்சி இப்போ..

    • Sakthi,sivagangai - ,

      சிரிப்பு வரல..

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    உருப்படி இல்லாத கனடா பிரதமர் ட்ரூடோ. இவருக்கு உள்நாட்டிலும் ஆதரவு இல்லை. கேவலம்.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    மிகப் பரந்த நிலப்பரப்பையும் குறைத்த மக்கள் தொகையும் பெரும்பாலான சீக்கிய குடிமக்களை கொண்ட கனடா, அவர்கேளுக்கென்று அமெரிக்க எல்லை பகுதியை காலிஸ்தானாக வழங்கி இரட்டை குடியுரிமையை காலிஸ்தான் கனடா பிரஜைகளுக்கு வைத்து கொள்ளலாம். இது போன்றுதான் அவர்கள் நகரவேண்டும் தவிர இந்திய மண்ணின் பக்கம் கவுகளையும் கற்பனைகளையும் கூட செய்யக்கூடாது. கூடுதலாக இரண்டு நாட்கள் தங்கியிருந்து எப்படியாவது சந்தித்து தனியாக சமரசம் சால்ஜாப்பு செய்யலாமென்றிருந்தவருக்கு, நேரம் ஒதுக்கப்படவே இல்லையாம். பங்கேற்ற மாநாட்டின் சம்பிரதாயத்தோடு வெளியேற்றிவிட்டாராம் தெற்கின் மீ உயர் தலைவர். ஓட்டலிலேயே இரண்டு நாள் தங்கியிருந்துவிட்டு வெளி உலா கூட செய்யாமல் திரும்பி விட்டார்.

    • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

      nandru

  • SUBBU,MADURAI -

    Canadians should know when diversity translates into destruction it will lead to dogma and indoctrination. Canada is allowing khalistani to simmer like France allowed Islamists. We know the future of France looks gloomy this is what awaits Canada.

  • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

    ட்ரூட்டோ ஒரு மதிப்பிழந்த பிரதமர், கேடுகெட்ட வெளிநாட்டு அரசியல்வியாதி....விவசாயிகள் போராட்டத்தை தூண்டிவிட்டு குளிர் காய்ந்த இவன்... கொரோனா தொற்று தொடங்கிய போது இந்தியாவை, இந்திய தடுப்பூசி மருந்துகளை பற்றி கேவலமாக பேசி ...பிறகு மோடியின் காலில் விழுந்து கதறிய ஒரு பச்சோந்தி . மோடி பெருந்தன்மையோடு உதவிகள் செய்தும் சிறிதும் நன்றியின்றி ஒரு இந்திய எதிர்பாளராகவே தன்னை காட்டிக்கொண்டுள்ள ஒரு வெள்ளையின அசிங்கம்.அடுத்த கனடிய தேர்தலில் இவனால் எதிர்க்கட்சியாக கூட ஒட்டு வாங்க முடியாது...

    • RAMESH - chennai,இந்தியா

      பரமன் - அருமையான பதிவு

    • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

      சரியா சொன்னீங்க ஆனா அந்த ட்றுருடா வுக்கு புரியாத புதிர் தான்

  • Sampath Kumar - chennai,இந்தியா

    அன்று அன்று இந்திரா gandhiku talaivali கொடுத்த காலிஸ்தான் அவரின் சாவிற்கும் காரணம் ஆனது என்று அதே காலிஸ்தான் பிஜேபிக்கு மண்டை குடைச்சலை tharukintrathu

  • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

    கனடா எப்போதுமே இந்திய எதிர்ப்பு மனப்பான்மையிலேயே இருக்க கூடிய நாடுதான். அந்த நாட்டு பிரதமருக்கு இந்தியா என்றாலே பிடிக்காது. எப்போதுமே சீக்கிய தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்வதக பல புகார்கள் வந்துள்ளன. பாரதத்தின் இந்த நடவடிக்கை மிகச்சரியானதுதான். கண்டனங்களையும் விடாமல் தெரிவிக்க வேண்டும்.

  • Sathyam - mysore,இந்தியா

    ட்ரூடோ - இந்தியா எங்கள் வீட்டிற்குள் நுழைந்து தாக்கியது இதற்கிடையில், எங்கள் ரகசிய புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன: நாங்கள் உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை

  • ஆரூர் ரங் -

    ட்ரூடோ பெயருக்கு எதிரான பொய்யன்.🤪 ஆட்டம் பலமா இருக்கு. அவனையும் RAW நன்கு கவனிக்க வேண்டும் .கானடா இப்போ செல்வாக்கிழந்த எலி.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    இந்த விஷயத்தை வைத்து சோனியா, ராகுல் மற்றும் நம் நாட்டு தேச துரோகிகள் குளிர் காய்வார்கள்.

    • RAMESH - chennai,இந்தியா

      சமீபத்தில் ,காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்திரா காந்தி கொடும்பாவியை எரித்த சம்பவத்தை மோடிஜி அரசாங்கம் வன்மையாக கண்டித்தது . சோனியாவோ , ராஹுலோ அந்த நிகழ்விற்கு ஒரு எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை

  • ponssasi - chennai,இந்தியா

    பாகிஸ்தான் உள்ளே சென்று ஒசாமா வை இரவோடு இரவாக கொன்று கடலில் வீசிய அமெரிக்க அரசு செய்தது போலத்தான். அது எப்படி உங்களுக்கு சரி எனப்பட்டது அதுபோலத்தான் இதுவும்

  • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

    கனடா தவறான பாதையில் செல்கிறது

  • ponssasi - chennai,இந்தியா

    கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்தியாவிற்கு எதிராக காலிஸ்தான் போஸ்டர் ஓட்டுவதும், ஆயுதம் ஏந்தி போராட அழைப்பு விடுப்பதுவும் கனடா அரசு எப்படி ஆதரிக்கிறது. கனடாவிற்கு எதிராக ஒரு குழு இந்தியாவில் ஆதரவு திரட்டினால் இந்திய அரசு மவுனம் காக்குமா? அவனை கொன்றது ரா அமைப்பாக இருப்பினும் அதை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.

    • sridhar - Chennai,இந்தியா

      ட்ருடோவுக்கு கனடாவிலேயே எதிர்ப்பு வலுக்கிறது. அடுத்த தேர்தலில் அவரை காலி பண்ணிடுவாங்க . இந்தியாவை எதிர்த்த மலேசிய பிரதமரையும் தேர்தலில் தோற்கடிக்க பிஜேபி ஏற்பாடு செய்தது. பிஜேபி அரசியல் அறிவு முன் புள்ளி இந்தியா கூட்டணி ஒன்றும் செய்ய முடியாது.

  • Sathyam - mysore,இந்தியா

    நாங்கள் உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை

  • Sathyam - mysore,இந்தியா

    2024 தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கியுள்ளது...

    • Neutrallite - Singapore,சிங்கப்பூர்

      வெட்க கேடு எப்பொழுதும் இப்படியே நீங்கள் எண்ணுவது அல்லது காரணம் கற்பிப்பது. இன்று இந்த அதிகாரியை அனுப்பியதால் மக்கள் ஒட்டு போடுவார்கள் என்று நினைப்பது அரசியல் முதிர்ச்சியின்மையும் கூட..

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    சபாஷ்,

  • KC Arun - Tirunelveli,இந்தியா

    அங்கிருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளை சில காலம் நாம் திரும்ப அழைத்துக்கொண்டால் கனடா ஸ்தம்பித்துவிடும் என்பது ட்ரூடோ அவர்களுக்கு பிரதமர் பதவியில் இருந்தும் புரியவில்லை என்பது ஆச்சரியம் தான்.. அமெரிக்கா தயவால் அரசு ஓடுகிறது. சீக்கியர்கள் தயவால் வாகனங்கள் ஓடுகிறது. அவ்வளவு தான்.. மற்ற அனைத்துத் துறைகளும் இந்தியர்கள் தயவால் தான் ஓடுகிறது.

  • அப்புசாமி -

    ஜி20 மிகவும் ஒத்துமையா இருக்குது.

  • GANESAN S R - chennai,இந்தியா

    கனடா பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. அங்கேயும் ஒட்டு வாங்கி அரசியல்.

  • செந்தமிழ் கார்த்திக் - Madurai to Chennai ,இந்தியா

    கனடாவிடம் விரிசலை சரி செய்ய வேண்டும். கனடாவிடம் இந்திய பகைத்து கொள்வதால் இந்தியர்களுக்கு தான் நஷ்டம் அதிகம் என்பதனை ஊழல் ஒன்றிய அரசு உணர வேண்டும். தேவையான சில விஷ செடிகள் அகற்றும்பொழுது, அதுவும் இந்திய அரசால் நடத்த படும்போது அதை ரகசியமாக செய்ய வேண்டும். இப்படி மானம் போகிற அளவிற்கா செய்வது ?

    • Ranga - பாண்டிய நாடு, தமிழக ஒன்றியம். பாரதம்.,இந்தியா

      இந்தியாவிற்கு எந்த நஷ்டமும் இல்லை.. கனடா திவாலாகி வருகிறது. அங்கிருக்கும் இந்தியர், இலங்கையர் போன்றோர் தமது நாட்டவர்களை கனடாவிற்கு வரவேண்டாம் என்கின்றனர். இது தெரியாமல் உலறுபவர்களுக்கு மோடியின் ராஜதந்திரம் எங்கிருந்து தெரியப் போகிறது? கிணற்று தவளைக்கு மெகா ஊழல் திமுகவே உலகம்.

  • Ranga - பாண்டிய நாடு, தமிழக ஒன்றியம். பாரதம்.,இந்தியா

    சீக்கியர்களின் 3% ஓட்டு வங்கிக்காக கனடா அரசு காலிஸ்தான் பயங்கரவாதிகளின் .... வருங்கால பாகிஸ்தானாக கனடா மாறி வருகிறது.

  • Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா

    சூப்பர் ... கனடா பிரதமற்கு

    • Raa - Chennai,இந்தியா

      இங்க ஒருவர் நாடு கடத்தப்பட வேண்டியுள்ளார்

    • K.ANBARASAN - muscat,ஓமன்

      ரா இந்த ஆளை கண்காணிக்க வேண்டும்

    • Raa - Chennai,இந்தியா

      அன்பரசன் - "இந்த ஆளை கண்காணிக்க வேண்டும்..." - யாரை??

கனடா விவகாரம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு (5)

  • adalarasan - chennai,இந்தியா

    for a change. good

  • Rajasekaran - Chennai,இந்தியா

    என்னடா காங்கிரசுக்கு வந்த சோதனை ?

  • TG elangovan - Bengalore,இந்தியா

    All partys support to Central Governt when certical our nation we are all in one party shows our unity on Canada nation.

  • duruvasar - indraprastham,இந்தியா

    பஞ்சாபில் ஆம் ஆத்மி புள்ளி கூட்டணியில் இல்லை என்றதும் எழுந்த தேசபக்தி.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    கட்சி தலைமையகைக்கு மிகவும் கீழ் படிதலுள்ள குட்டி தலைவர் தமிழ்நாட்டின் அளும்கிரி போல்

இந்தியா மீது கனடா பிரதமரின் குற்றச்சாட்டு: அமெரிக்கா கவலை (18)

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    ஸ்டாலினின் கருத்து என்னவென்றும் கேட்டுடுங்க... ஹிஹி... அவரும் உலக தலைவர்தான்....

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    Canada pradhamar Jastin Trudeau avargale oru theeviravaadhiyaaga iruppaar endru kavalai alikkiradhu.

  • Ram - ottawa,கனடா

    கனடா தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடு

  • Sathyam - mysore,இந்தியா

    if you are enemy of Bharat we will find and kill you whereever you are This is new Bharat நீ பாரதத்திற்கு விரோதியானால் உன்னை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து கொன்று விடுவோம் இது புதிய பாரதம்

  • Sathyam - mysore,இந்தியா

    கனடாவை தளமாகக் கொண்ட காலிஸ்தான் டைகர் ஃபோர்ஸ் (KTF) தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் யார்? 10 ரூபாய் ரொக்கப் பரிசு பெற்ற இந்தியாவின் மோஸ்ட் தேடப்படும் பயங்கரவாதிகளில் இவரும் ஒருவர் அவரது தலையில் லட்சம், வட அமெரிக்க நாட்டில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார் இனந்தெரியாத ஆசாமிகளால். அன்றிலிருந்து 'காலிஸ்தானி ஆதரவாளர்கள்' குற்றம்சாட்டி வருகின்றனர் கொலைக்கு இந்திய அரசு. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஒரு பயங்கரவாதி. அவர் உள்ளே நுழைந்தார் 1997 இல் கனடா போலி அடையாளத்தைப் பயன்படுத்தியது. கனேடிய குடிவரவு அதிகாரிகளிடம் அவர் பொய் சொன்னார்.பின்னர் அவர் ஒரு பிரிட்டிஷ் கொலம்பியனை மணந்தார், அவர் குடியேறுவதற்கு நிதியுதவி செய்தார்.ஹர்தீப் சிங் இந்தியாவில் நிஜ்ஜாரின் குற்றச் செயல்கள் - பாபர் கல்சாவில் உறுப்பினராகத் தொடங்கப்பட்டது சர்வதேச பயங்கரவாத அமைப்பு.பின்னர் அவர் தனது சொந்த பயங்கரவாதியை நிறுவினார் குரூப் காலிஸ்தான் புலி படை (KTF). அடையாளம் காண்பதில் முக்கிய பங்கு வகித்தது, இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட எஃப்ஐஆர்களுக்கு பயிற்சி, இணைத்தல் மற்றும் நிதியளித்தல் அவர் மீது பதிவு செய்யப்பட்ட நிஜ்ஜார் சுயமாக அறிவிக்கப்பட்டவர் கொலையில் ஈடுபட்டார் ஆன்மீகத் தலைவர் பாபா பனியாரா ஒரு தோல்வியுற்ற கொலை முயற்சியில் ஈடுபட்டார் இந்த கொலையில் பஞ்சாப் நிஜ்ஜாரின் தொடர்பு உள்ள சிவசேனா தலைவர்களும் வெளிப்பட்டனர் பதிண்டாவில் நடந்த தேரா சச்சா சவுதாவின் சீடர் மனோகர் லால் 2013-14 இல், நிஜ்ஜார் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார், KTF இன் ஜக்தர் சிங் தாராவை சந்தித்தார். 2015 ஆம் ஆண்டு தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார், அவரது பாக்-ஹேண்ட்லர்கள் குறித்து உளவுத்துறை நிறுவனங்களை எச்சரித்தார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலையில் தாராவுக்கு தொடர்பு இருந்தது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயையும் சந்தித்தார்.2015 - மற்றொரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது மதத் தலைவர்களைக் கொல்ல சதி செய்ததற்காக அவருக்கு எதிராக.2016 - மற்றொரு எஃப்.ஐ.ஆர் டிசம்பர் 2015.2015,2016 இல் கனடாவில் பயிற்சி முகாமை ஏற்பாடு செய்ததற்காக - ஒரு பார்வை நிஜ்ஜாருக்கு எதிராக சுற்றறிக்கை (LOC) மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் (RCN) ஆகியவையும் பதிவு செய்யப்பட்டன. தீவிரவாத அமைப்பின் மூளையாக செயல்பட்டதற்கான ஆதாரம் இந்தியாவிடம் உள்ளது காலிஸ்தான் புலிப் படை. அவருக்கும் ரிபுதமன் சிங் மாலிக்கும் தொடர்பு உள்ளது 1985 ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. நிஜ்ஜார் நெருங்கிய தொடர்புடையவர் நீதிக்கான சீக்கியர்கள் போன்ற நியமிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன். மேலும் ட்ரூடோ அரசாங்கம் அவரை அழைக்கிறது சீக்கிய ஆர்வலர்... அற்புதம்

  • Sathyam - mysore,இந்தியா

    கலிஸ்தானியர்கள் கனேடிய அரசாங்கத்திடம் பயங்கரவாதம் பற்றி பேசும் போதெல்லாம் அவர்கள் அழுகிய பதிலைச் சொல்கிறார்கள். இங்கு கருத்து சுதந்திரம் உள்ளது.அமைதியாக போராட்டம் நடத்த சுதந்திரம் உள்ளது. எனினும், FOE என்ற பெயரில் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது ஜனநாயகம் அல்ல. இதை நாம் புரிந்துகொள்வோம் ஒரு உதாரணத்துடன், கனடாவின் வரலாற்றில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் 1985 ஏர் இந்தியா ஆகும் கனிஷ்கா குண்டுவெடிப்பில் 329 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் 268 பேர் கனேடியர்கள் மற்றும் அவர்களில் பெரும்பாலோர் அவர்கள் பஞ்சாபி மக்கள். இந்த பயங்கரவாத சம்பவத்தின் முக்கிய சதிகாரன் தல்விந்தர் இந்த தாக்குதலுக்கு நிதியளித்த சிங் பர்மர், வெடிகுண்டுகளை ஏற்பாடு செய்தார், க டத்தல்காரர்களை வாடகைக்கு அமர்த்தினார்.இதைச் செய்தாரா, வாங்கினார்விமான டிக்கெட்டுகள், பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகளை செய்தது. கனடியன் அரசாங்கம் அவரை குற்றவாளி என்று அறிவித்தது, அங்குள்ள புலனாய்வு அமைப்புகள் அவரை குற்றவாளி என்று அறிவித்தது, அங்குள்ள நீதிமன்றம் குற்றவாளி. பின்னர் அவர் இந்தியா கொண்டு வரப்பட்டு 1992 இல் பஞ்சாப் காவல்துறையுடன் சண்டையிட்டு இறந்தார். இன்றும் கனடாவில், 'ஷாஹீத் பாய் தல்விந்தர் சிங் பர்மர்' ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது ஜூன் 25 அன்று அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கார் பேரணி நடைபெறுகிறது. இது அவர்களின் FOE இன் நிலை. முடியுமா அமெரிக்காவில் ஒசாமாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பேரணி நடைபெறுமா? ஹிட்லர் இஸ்ரேலில் அல்லது ஜெர்மனியில் தியாகியா? அவரது நினைவாக கார் பேரணி நடத்தலாமா? இது நடக்காது, ஆனால் அது கனடாவில் நடக்கிறது.அங்குள்ள அரசாங்கம் சுதந்திரம் என்ற பெயரில் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறது.

  • Sathyam - mysore,இந்தியா

    கடந்த 6 மாதங்களில் உச்சகட்ட கலிஸ்தானி பயங்கரவாதி கொல்லப்பட்டான்.- ஹர்விந்தர் ரிண்டா- லாகூரில் கொல்லப்பட்டார் Happy சங்கேரா- இத்தாலியில் கொல்லப்பட்டார். பிஷீர் அகமது- ராவல்பிண்டியில் கொல்லப்பட்டார் பர்ம்ஜித் பஞ்வார்- லாகூரில் கொல்லப்பட்டார்.- காலித் ராசா- கராச்சியில் கொல்லப்பட்டார் அவதார் கந்தா- இங்கிலாந்தில் கொல்லப்பட்டார் ஐஜாஸ் அகமது & சையத் நூர்- ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டனர்- நிஜ்ஜார் கனடாவில் கொல்லப்பட்டார் பண்ணு தி பன்னி (தமிழில் பன்றி) - அடுத்த உலகத்திற்கு அனுப்பப்படலாம் பாக்கி ஹை படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதேபோன்ற உள் எதிரிகளை நீங்கள் காண்பீர்கள்.ஜெய் ஹிந்த் வெறும் R&AW விஷயங்கள்.

  • Sathyam - mysore,இந்தியா

    பாரதத்தில் தேடப்பட்டு வந்த நான்கு பயங்கரவாதத் தளபதிகள் 2023 மார்ச் 5 அன்று பாகிஸ்தானில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரைச் சேர்ந்த ஹிஸ்புல் பயங்கரவாதி 22 பிப்ரவரி 2023 அன்று பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டான். பாரதனை கடத்திய பயங்கரவாதி 2022ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சியில் ஐசி-814 விமானம் சுட்டுக் கொல்லப்பட்டது 2023 ஜனவரியில் பஞ்சாப் மாகாணத்தில் இரண்டு பாகிஸ்தான் உளவுத்துறை முகவர்கள் இனம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காலிஸ்தான் அமைப்பின் தலைவர் லாகூரில் 7 மே 2023 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இப்போது அவதார் சிங் காந்தாவுக்கு இங்கிலாந்தில் பிக் தண்டா கிடைத்துள்ளது. பாடப்படாத மாவீரர்கள் தேசத்திற்காக மௌனமாக தங்கள் பணியைச் செய்கிறார்கள்.

  • KC Arun - Tirunelveli,இந்தியா

    அமெரிக்க தலைவர்கள் நாட்டின் சார்பாக பேசுகிறார்கள். அதனால் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அவர்களிடம் இல்லை. ஆனால் கனடா பிரதமர் சுய விருப்பு வெறுப்பை காட்டுகிறார். இதில் பாதிக்கப்படப்போவது என்னவோ அவர் நாடு தான். சீன அதிபரையும், ரஷ்ய அதிபரையும் பொது வெளியில் கண்ணியக்குறைவாக பேசி, நடத்திய மாவீரர் ட்ரூடோ அவர்கள். அதே வீரத்தை நம் பிரதமரிடம் காட்டினார். அதே பொதுவெளியில் அவமானத்தை அளித்தார் நம் பிரதமர். பயபுள்ள அங்க போயி இன்னும் அழுவையை நிப்பாட்டல போல.

  • RAMESH - chennai,இந்தியா

    ஜஸ்டின் ட்ருடோ காலிஸ்தான் வோட்டு வங்கியை தனக்கு சாதகமாக தக்க வைக்க அரங்கேற்றி இருக்கும் கூத்து தான் . எப்படி இங்க தீய திமுக அரசு மைனாரிட்டி வோட்டு வங்கியை தனது பக்கம் வைத்து கொள்ள ஹிந்துக்களையும் சனாதன தர்மத்தையும் எதிர்கிறதோ அதுபோலத்தான் இதுவும் . பாகிஸ்தானை எப்படி பெரும்பாலான நாடுகள் தீவிரவாதத்தால் ஒதுக்கி வைத்துள்ளது, அதேபோல் காலிஸ்தான் தீவிரவாதத்தால் கனடாவையும் மற்ற பிற நாடுகள் ஒதுக்கி வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

  • jayvee - chennai,இந்தியா

    தீவிரவாதிகளின் தலை கொய்யப்படும்.. அது பாகிஸ்தானோ, கனடாவோ ஏன்.. தமிழகமாக இருந்தாலும்..

  • DVRR - Kolkata,இந்தியா

    கனடா பிரதமரின் குற்றச்சாட்டு????அப்போ இன்னும் கொஞ்சம் நாள் வெய்ட் பண்ணுங்கள் கனடா காலிஸ்தான் நாடு என்று அழைக்கப்படப்போகின்றது என்று சொல்வது போல இருக்கின்றது

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    கனடாவிலிருந்து தீவிரவாதம் இந்தியா நோக்கி வரும் பட்சத்தில் இந்தியா எடுக்கும் நடவடிக்கை ஞாயமானதே. இதில் மூன்றாவது நாடு தேவையில்லாமல் ஏன் மூக்கை நீட்ட வேண்டும்.

  • Girija - Chennai,இந்தியா

    ஜோ பையனுக்கு க்கு ரொம்ப கவலை.............. பாவம் ....ஓநாய் அழுத கதை .

  • Rpalnivelu - Bangalorw,இந்தியா

    கவலையோடு நிறுத்திக்கோங்க. இது திருட்டு கான்க்ராஸ் காலம் இல்ல. இஸ்ரேலைபோல கமுக்கமா வச்சு செய்வோம்

  • Kannan Chandran - Manama,பஹ்ரைன்

    இதே அமெரிக்கன் செய்தால் அது தீவிரமாக எதிர்ப்பு நடவடிக்கை, மற்றவர்கள் செய்தால் கவலை அளிக்கிறது..உலகில் தீவிரமாக செயலை ஊக்குவித்து அதற்கு தனி பட்ஜெட் போட்ட ஒரே நாடு அமெரிக்காதான்

  • ஸ்ரீ ராஜ் -

    Tool kit

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்