Load Image
Advertisement

பழைய ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பில் மனசாட்சியுடன் அரசு நடக்க வேண்டும் அரசு பணியாளர் சங்க தலைவர் பேட்டி

 Govt should act conscientiously in announcing old pension scheme Government Employees Union President Interview    பழைய ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பில் மனசாட்சியுடன் அரசு நடக்க வேண்டும் அரசு பணியாளர் சங்க தலைவர் பேட்டி
ADVERTISEMENT
சிவகங்கை:''அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பில் தமிழக அரசு மனசாட்சியுடன் நடக்க வேண்டும்,'' என, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பி.குமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என தி.மு.க., கடந்த சட்டசபை தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது.

இதுகுறித்து நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் போலீசாரை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க மறுக்கும் அரசின் நிலைப்பாடு அதிர்ச்சி தருகிறது. நீதிமன்ற தீர்ப்பில் மத்திய அரசு பணிகளில் புதிய ஓய்வூதியத் திட்டம் அமலான 2004 ஜன., 1க்கு முன் பணி நியமன அறிவிப்பு செய்து, அதற்கு பின் பணி நியமன உத்தரவு வழங்கியவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் நலன்களை காக்கும் வாக்குறுதி அளித்து விட்டு, தமிழக அரசு மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். நீதிமன்றம் உத்தரவிற்கு பிறகும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த மறுத்து அளித்த வாக்குறுதியின் நம்பக தன்மையை அரசே சிதைப்பது தான் வேதனை தருகிறது.

சென்னையில் நடந்த ஜாக்டோ- ஜியோ வாழ்வாதார மாநாட்டில் வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

ஆனால் இன்று வரை அரசு மவுனம் கலையவில்லை. பழைய ஓய்வூதியத் திட்ட அறிவிப்பை அரசு விரைந்து வெளியிட வேண்டும், என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement