Load Image
Advertisement

ஆண் யானை இறப்பில் மர்மம்! வனத்துறையினர் விசாரணை

உடுமலை;திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, வனப்பகுதியில் ஆண் யானை மர்மான முறையில் இறந்து கிடந்தது குறித்து, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகம், ஈசல் திட்டு பகுதியில், ஆண் யானை இறந்து கிடந்தது.

இது குறித்து தகவல் கிடைத்ததும், வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். சம்பவ இடத்திலேயே, பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உடல் பாகங்கள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த ஆண் யானைக்கு, 20-25 வயது இருக்கலாம். முதற்கட்ட பரிசோதனையில், இயற்கையான முறையில் இறந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இளம் வயது யானையாக இருந்ததால், யானையின் தந்தங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.' என்றனர். உடுமலை வனச்சரகத்தில், கடந்த, ஆறு மாதத்தில், 3 ஆண் யானைகள் இறந்துள்ளன. மாவடப்பு பகுதியில் வேட்டை கும்பலால் யானை கொல்லப்பட்ட நிலையில், குற்றவாளிகள் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், ஈசல் திட்டு பகுதியில் ஆண் யானை இறந்துள்ளது, வனத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement