ADVERTISEMENT
பெரியகுளம்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நேற்று மதியம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது.
பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., துாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி போன்றவற்றில் சில நாட்களாக பெய்யும் மழை மற்றும் கும்பக்கரை நீர் பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது.
நேற்று காலை 8:00 மணி முதல் கும்பக்கரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்த நிலையிலும், நேற்றும் நூற்றுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அருவி பகுதியில் குளித்தனர்.
நேற்று மதியம் 3:00 மணிக்கு கனமழை பெய்ய துவங்கியது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உருவானதை அறிந்த வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை வேகமாக வெளியேற அறிவுறுத்தினர். மாலை 4:00 மணிக்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வனத்துறை ரேஞ்சர் டேவிட் ராஜா கூறுகையில்,''அருவியில் தண்ணீர் வரத்து சீராகும் வரைமறு தேதி குறிப்பிடாமல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!