ஆட்டோ கட்டணம் 12 வாரத்தில் மாற்றம்
சென்னை:'தமிழகத்தில், 12 வாரத்துக்குள் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த வேண்டும் என, 2013ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை அமல்படுத்த உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'பெட்ரொல்,- டீசல் விலை அடிப்படையில், ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு பிளீடர் பி.முத்துகுமார் ஆஜராகி, ''போக்குவரத்து துறை இணை கமிஷனர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ஆட்டோ தொழிற்சங்கத்தினர், நுகர்வோர் அமைப்பினர் என, பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் உள்ள கட்டண விகிதத்தை கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுத்து, 12 வாரத்துக்குள் மாநிலம் முழுதும் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படும்,'' என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!