ஆசிரியர்களுக்கு அக்.4 முதல் எண்ணும் எழுத்தும் பயிற்சி
ராமநாதபுரம்:ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு வட்டார அளவில் அக்.4 முதல் 11 வரை இரு கட்டங்களாக எண்ணும் எழுத்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும்மாணவர்களுக்கு முதலாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு பயிற்சி செப்.20முதல் 27 வரை செயலி மூலம் நடத்த வேண்டும்.
நிர்வாக காரணங்களுக்காகநான்கு முதல் ஐந்தாம்வகுப்பு மாணவர்களுக்கு எழுத்து தேர்வாகநடத்த வேண்டும்.வாரந்தோறும் நடந்த வளரறி மதிப்பீடு தேர்வு, இரண்டாம் பருவம் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. செப்.20 முதல் 27 வரை முதலாம் பருவத்தேர்வு நடப்பதால், எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் அடுத்த மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து வட்டார அளவில் ஆசிரியர்களுக்கு ஒன்று முதல் மூன்றாம் வகுப்புக்கு அக். 4 முதல் 6 வரையும், 4 முதல் 5ம் வகுப்புக்கு அக்.9 முதல் 11 வரை இருகட்டங்களாக எண்ணும் எழுத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!