ADVERTISEMENT
தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ஜான்பிரிட்டோ 48, குணசேகரன் 62, ஆரோக்கியதாஸ் 57, ஆண்ட்ரூஸ் 40. இவர்கள் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு கடலுக்கு படகில் மீன் பிடிக்கச்சென்றனர். நீண்ட துாரம் சென்று மீன்பிடித்துக்கொண்டிருந்த போது வலையை இழுக்க முயற்சித்த ஜான்பிரிட்டோ கடலில் தவறி விழுந்து மூச்சுத்திணறி இறந்தார். மற்ற மீனவர்கள் அவரது உடலை கரைக்கு கொண்டு வந்தனர். மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஜான்பிரிட்டோவிற்கு ஒரு மனைவி, மகள் உள்ளனர். அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என காரங்காடு ஊராட்சி தலைவர் கார்கோல்மேரி வலியுறுத்தியுள்ளார்.
ஜான்பிரிட்டோவிற்கு ஒரு மனைவி, மகள் உள்ளனர். அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என காரங்காடு ஊராட்சி தலைவர் கார்கோல்மேரி வலியுறுத்தியுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!