Load Image
Advertisement

லஞ்சம் வாங்கிய செய்தித் துறை அலுவலர்கள் கைது

சென்னை:தலைமைச் செயல கத்தில், 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை, பொருட்காட்சி அனுமதி பிரிவு கணக்கர் மற்றும் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகை என்ற கட்டடத்தின், 10வது மாடியில், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலகம் செயல்படுகிறது.

அங்கு, பொருட்காட்சி நடத்த அனுமதி வழங்கும் பிரிவு உள்ளது. இதில், உயர்நிலை கணக்கராக, அன்பரசு, அலுவலக உதவியாளராக, பாலாஜி ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

இவர்கள், பொருட்காட்சி நடத்த அனுமதி வழங்குவது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த மாணிக்கவாசகத்திடம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்து, மாநில லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று மாலை 6:30 மணியில் இருந்து, ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். லஞ்சப் பணம், 15,000 ரூபாயை வாங்கியபோது, அன்பரசு மற்றும் பாலாஜி ஆகியோரை கைது செய்தனர்.

கணக்கில் வராத 90,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement