சத்துணவு ஊழியர்கள் 36 மணிநேர உண்ணாவிரதம் சென்னையில் செப்.29,30 ல் நடக்கிறது
தேனி:காலை உணவுத்திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செப்.29,30ல் 36 மணி நேர உண்ணாவிரதமும், டிச., முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் சங்க மாநில தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தில் சத்துணவுப்பணியாளர்களை கொண்டு செயல்படுத்தவும், சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்கவும், கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
அடுத்ததாக சென்னை சமூக நலன், மகளிர் உரிமைத்துறை இயக்குனர் அலுவலகம் முன் செப்.29,30ல் 36 மணி நேர உண்ணாவிரதம் நடத்த உள்ளோம்.
டிச.,முதல் அங்கன்வாடி பணியாளர்கள் கூட்டமைப்புடன் இணைந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம், என்றார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!