Load Image
Advertisement

வெறிநாய் கடித்து 16 பேர் காயம்

 16 people were injured after being bitten by a rabid dog    வெறிநாய் கடித்து 16 பேர் காயம்
ADVERTISEMENT
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வெறிநாய் கடித்து குதறியதில் 16 பேர் காயமடைந்தனர். இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

திருவாடானை அருகேவுள்ள சில கிராமங்களில் விவசாய வேலைக்கு சென்றவர்கள், தெருக்களில் நடந்து சென்றவர்கள் என 16 பேரை நாய்கள் விரட்டி கடித்தன. இதனால் அவர்கள் அலறியடித்து ஓடினர்.

நாய்கள் கடித்ததில் சூச்சனியை சேர்ந்த ராமு 60, குஞ்சங்குளம் ஆரோக்கியதாஸ் 50, கீழகைக்குடி புஷ்பம் 50, கம்பெனிகரையக்கோட்டை ஆசைதம்பி 60, வெளியங்குடி பூரணம் 55, ஆகியோர் காயமுற்று திருவாடானை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் 11 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சூச்சனியை சேர்ந்த ராமு கூறியதாவது: நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த மாட்டை வெறி நாய் கடிக்கச் சென்றது. அதை தடுக்கச் சென்ற போது என் காலை கடித்து குதறியது.

திருவாடானை பகுதியில் வெறிநாய்கள் கடித்ததில் ஏராளமான ஆடுகள், மாடுகள் இறந்துள்ளன. நாளுக்கு நாள் வெறி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பொதுமக்களை பாதுகாக்க தெரு நாய்களை அப்புறப்படுத்த உள்ளாட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement