ADVERTISEMENT
ஆங்கிலேயரிடம் இருந்து ஆட்சி அதிகாரம் நம் கைகளுக்கு மாற்றப்பட்டதன் சாட்சியாக பார்லிமென்டின் மைய மண்டபம் இருந்து வருகிறது. இந்த பார்லிமென்ட் பயணம், சிறப்பான சாதனைகள், கடினமான சவால்கள், குறிப்பிடத்தக்க மைல்கற்களால் நிரம்பியது.
பிரஹலாத் ஜோஷி பார்லி., விவகாரத்துறை அமைச்சர், பா.ஜ.,
புதிய பார்லி.,க்கு பிரதமர் வருகை!
பழைய பார்லிமென்டில் இருந்து புதிய பார்லிமென்ட் வளாகத்துக்கு செல்வதை குறிக்கும் வகையில், பழைய பார்லிமென்ட் வளாகத்தின் மைய மண்டபத்தில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் அனைத்து கட்சி எம்.பி.,க்களும் பங்கேற்றனர்.
அதன் பின், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோர், தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் புடைசூழ, பழைய பார்லி.,யில் இருந்து புதிய பார்லி., வளாகம் நோக்கி நடந்தனர்.
அப்போது எம்.பி.,க்கள், 'பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்' என, முழக்கமிட்டனர்.
அவர்களை தொடர்ந்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் ஊர்வலமாக புதிய பார்லி., வளாகத்துக்கு நடந்து சென்றனர்.
'அரசியலைமறந்து ஒன்றிணைவோம்'
பழைய பார்லிமென்ட் வளாகத்தின் மைய மண்டபத்தில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
நமக்குள் இருக்கும் அரசியலை மறந்து, தேசத்தைக் கட்டியெழுப்பவும், தேசத்தையும், அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க நாம் ஒன்று சேர வேண்டும். இதுவே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பழைய பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று காலை கூட்டம் கூடியது. அதன் பின், பழைய பார்லிமென்ட் வளாகத்தின் முன் நின்று, கட்சி பாகுபாடின்றி தலைவர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் பிரதமர் மோடிக்கு அருகில் அமர்ந்தனர். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்., லோக்சபா தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்., முன்னாள் தலைவர் சோனியா, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, 93 வயதான எம்.பி., ஷபிகுர் ரஹ்மான் பார்க் உள்ளிட்டோர் முதல் வரிசையில் அமர்ந்தனர்.
காங்., - எம்.பி., ராகுல், இரண்டாவது வரிசையில் நின்றுகொண்டார். பல எம்.பி.,க்கள் தரையில் சம்மனமிட்டு அமர்ந்து கொண்டனர்.
பார்லிமென்ட் ஹவுஸ்
எம்.பி.,க்கள் குழு புகைப்படம்
லோக்சபா செயலகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது:
பழைய பார்லி மென்ட் கட்டடத்தின் கிழக்கு பகுதியில், பிளாட் எண் 118ல் கட்டப்பட்டுள்ள புதிய பார்லிமென்ட் வளாகத்திற்கு, 'இந்திய பார்லிமென்ட் ஹவுஸ்' என, பெயர் சூட்டுவதில் லோக்சபா சபாநாயகர் மகிழ்ச்சி அடைகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பிரதியுடன் வந்த காங்., - எம்.பி.,க்கள்
எம்.பி.,க்கள் குழு புகைப்படம்
காங்., லோக்சபா தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கையில் அரசியலமைப்பு பிரதியை சுமந்தபடி புதிய பார்லிமென்ட் கட்டடத்துக்குள் நுழைந்தார். அவருடன் காங்., - எம்.பி., ராகுல் உட்பட காங்., உறுப்பினர்கள் உடன் சென்றனர்.
புதிய கட்டடத்துக்குள் நுழையும் போது, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராகுல் உள்ளிட்டோர் அரசியலமைப்பு பிரதியை உயர்த்தி பிடித்தபடியே உள்ளே நுழைந்தனர்.
எம்.பி.,க்கள் குழு புகைப்படம்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!