பூஜித்த விநாயகர் சிலைகளை வீட்டிலேயே கரைக்க அறிவுரை
சென்னை:விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
இயற்கையான களிமண், காகிதக்கூழ், இயற்கை வண்ணங்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே, நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்
சிலைகளை கரைக்கும் முன், சிலைகளை அலங்கரித்த துணிகள், பூமாலைகள், தோரணங்கள், இலைகள், செயற்கை ஆபரணங்கள் போன்றவற்றை, 24 மணி நேரத்திற்குள், உள்ளாட்சி அமைப்புகள் அகற்ற வேண்டும். அவற்றை, திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாள வேண்டும்
சிலைகளில் இருந்து அகற்றப்பட்ட பொருட்களை, நீர் நிலைகளின் கரையோரம் கொட்டி, தீயிட்டு எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
வீடுகளில் பூஜை செய்யப்பட்ட களிமண் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்காமல், கூடுமானவரை வீட்டில் வாளியில் நீர் நிரப்பி, அதில் சிலையை மூழ்க வைத்து கரைக்கவும்.
தெளிந்த நீரை வடிகாலில் வெளியேற்றலாம். சேற்றை உலர வைத்து, தோட்டத்தில் மண்ணாக பயன்படுத்தலாம்.
இவ்வாறு வாரியம் தெரிவித்துள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!