Load Image
Advertisement

உரிமைத் தொகை மேல் முறையீடு சர்வர் கோளாறால் பாதிப்பு

 Entitlement appeal affected by server failure    உரிமைத் தொகை மேல் முறையீடு  சர்வர் கோளாறால் பாதிப்பு
ADVERTISEMENT
ராமநாதபுரம்:மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தின் நிலை குறித்த குறுந்தகவல் பலருக்கும் வரவில்லை. அவர்கள் அரசு இ-சேவை மையங்களில் மேல்முறையீடு செய்ய குவிந்தபோது சர்வர் கிடைக்காததால் அலைக்கழிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் செப்.,15 முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பித்தும் பயன்பெறாதவர்களுக்கு செப்.,18 ல் அதற்கான காரணம் குறித்து குறுந்தகவல் அனுப்பப்படும். நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையங்களில் மேல்முறையீடு செய்யலாம், என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பலருக்கு விண்ணப்பத்தின் முடிவு நிலை குறித்து குறுந்தகவல் வரவில்லை.

இ-சேவை மையங்களில் மேல் முறையீடுக்கு விண்ணப்பிக்க பல இடங்களில் மகளிர் குவிந்தனர். ஆனால் சர்வர் சரிவர செயல்படவில்லை.

இதனால் தாலுகா அலுவலகம், உரிமைத் தொகை உதவி மையங்களில் ஊழியர்கள் பதிலளிக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாயினர்.

ராமநாதபுரம் பாரதி நகர் சலாமத்கனியா என்பவருக்கு ரூ.1000 வரவு வைத்துள்ளதாக குறுந்தகவல் அனுப்பப்பட்டது.

ஆனால் அவரது வங்கி கணக்கில் வரவாகவில்லை என அவர் புகார் தெரிவித்தார்.

தாசில்தார் ஸ்ரீதரன் கூறுகையில், ''சென்னையில் இ-சேவை மையத்தில் சர்வர் கோளாறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தான் சரி செய்ய வேண்டும்.

ஒரு மாதம் வரை மேல்முறையீடு செய்யலாம். வேறு நபர் கணக்கில் வரவு வைத்ததாக தெரிய வந்தால் பணத்தை மீட்டு உரிய கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement