Load Image
Advertisement

இரு நாட்களில் இறந்த நான்கு புலி குட்டிகள்

 Four tiger cubs died in two days    இரு நாட்களில் இறந்த நான்கு புலி குட்டிகள்
ADVERTISEMENT
ஊட்டி:ஊட்டி அருகே சின்ன குன்னுார் வனப்பகுதியில் இரு நாட்களில், நான்கு புலி குட்டிகள் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஊட்டி வடக்கு மற்றும் சீகூர் வனச்சரக எல்லையில், சின்ன குன்னுார் வனப்பகுதியில், நேற்று முன்தினம் ஒரு புலி குட்டி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

நேற்று மேலும் இரண்டு புலி குட்டிகள் இறந்து கிடந்தன. தகவலின் பேரில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமையில், வன அலுவலர் கவுதம், முதுமலை வெளிவட்ட பகுதி உதவி இயக்குனர் அருண் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ், பிரேத பரிசோதனை செய்தபின், அதே பகுதியில் புலி குட்டிகளின் உடல்கள் எரியூட்டப்பட்டன. அப்பகுதியில் காணப்பட்ட ஒரு பெண்புலி குட்டி உயிருடன் மீட்கப்பட்டது. அதற்கு சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் நேற்று இரவு இறந்தது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில், 10 புலிகள் பல்வேறு காரணங்களால் இறந்திருப்பது, வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், ''சின்ன குன்னுார் வனப்பகுதியில் இரண்டு நாட்களில், இரு மாதங்களான நான்கு புலி குட்டிகள் இறந்திருப்பதன் காரணம் குறித்து ஆராயப்படும். தாய்புலி குறித்து நான்கு குழுக்கள் அமைத்து தேடும் பணி நடந்து வருகிறது,'' என்றார்.

தாய்பால் இன்றி இறந்த குட்டிகள்...!

கோத்தகிரி 'லாங்வுட்' சோலை பாதுகாப்பு குழு செயலாளர் ராஜூ கூறுகையில், ''ஒரு புலி வாழ்வதற்கு, 50 சதுர கி.மீ., காடு தேவை. பல்லுயிர் சூழல் விலங்கான புலி வாழும் இடத்தில், அனைத்து விலங்குகளும், தாவரங்களும் செழித்து வாழும். நீலகிரியில் புலிகளின் தொடர் இறப்பு வருத்தம் அளிக்கிறது. குறிப்பாக, சீகூர் வனச்சரகத்தில், ஒரு மாதத்தில், 6 புலி குட்டிகள் தாய்பால் இல்லாமல் இறந்துள்ளன. அப்படி எனில், தாய்புலி எங்கே சென்றது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். நவீன தொழில்நுட்ப உதவியுடன், இங்கு வாழும் தேசிய விலங்கின் பாதுகாப்பை, புலிகள் பாதுகாப்பு ஆணையம் உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement