பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கு ரத்து செய்தது ஐகோர்ட்
சென்னை:மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, சமூக வலைதள சேனல் ஒன்றுக்கு, சென்னையை சேர்ந்த, 'கிழக்கு பதிப்பகம்' உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி பேட்டி அளித்திருந்தார். ஜூலை, 22ல் வெளியான இந்த பேட்டியில், உச்ச நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்து, சமூக வலைதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இது குறித்து, பெரம்பலுார் மாவட்டம், குன்னம் போலீஸ் நிலையத்தில், ஜூலை 27ல், வழக்கறிஞர் கவியரசு என்பவர் புகார் அளித்தார்.
அதன்படி, பத்ரி சேஷாத்ரி மீது வழக்குப் பதிவு செய்த குன்னம் போலீசார், ஜூலை 29ல், அவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பத்ரி சேஷாத்ரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சிக்கும் வகையில் பேசவில்லை என்றும், நீதித்துறை மீது மிகுந்த மரியாதை வைத்து உள்ளதாகவும், தன் பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், பத்ரி சேஷாத்ரி தரப்பில், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கை ரத்து செய்துஉத்தரவிட்டார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!