தண்ணீரில் மூழ்கி ஏழு சிறுமியர் பலி
ராய்ப்பூர், ஜார்க்கண்டில் குளம் மற்றும் ஆற்றில் மூழ்கி, ஏழு சிறுமியர் பலியாகினர்.
ஜார்க்கண்டில் உள்ள கிரிடிஹ் மாவட்டத்தில் கர்ம பூஜையையொட்டி நேற்று காலை அங்குள்ள குளத்தில் குளிப்பதற்காக, 15 வயதுக்கு உட்பட்ட ஐந்து சிறுமியர் சென்றனர்.
அவர்கள் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால் மூச்சு திணறி தண்ணீரில் சிக்கி தவித்தனர்.
இவர்களில் ஒரு சிறுமி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். மற்ற நான்கு பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.
இதேபோல் ராய்ப்பூர் மாவட்டத்தின் கெர்வா கிராமத்தில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருந்த குடும்பத்தைச் சேர்ந்த சிறுமியர் சிலர், நேற்று முன்தினம் அங்குள்ள குமானி ஆற்றில் குளித்தனர். 10 முதல் 15 வயதுக்கு உட்பட்ட அந்த மூன்று சிறுமியர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பலியாகினர்.
இறந்த சிறுமியரின் சடலங்கள் அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!