Load Image
Advertisement

அக்.7 திறனாய்வு தேர்வு அக்.15 திறனறிவு தேர்வு அவதியில் பிளஸ் 1 மாணவர்கள்

ஒட்டன்சத்திரம்:பிளஸ் 1 மாணவர்களுக்கான முதல்வர் திறனாய்வு தேர்வு அக்.,7 மற்றும் அக்., 15 ல் திறனறிவு தேர்வும் நடக்க உள்ளது. இத்தேர்வுகளுக்கான இடைவெளி குறைவாக உள்ளதால் தேர்வுக்கு தயாராவதில் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

எனவே திறனறிவு தேர்வை தள்ளி வைக்க அரசு தேர்வுகள் இயக்ககம் முன்வர வேண்டும்.

பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு அக். 15ல் நடக்கும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது. இத்தேர்வை பிளஸ் 1 மாணவர்கள் எழுதலாம். இதன் மூலம் 1500 மாணவர்கள் தேர்வு செய்து பள்ளி கல்வித்துறை மூலம் மாதம் ரூ.1500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

இந்நிலையில் பிளஸ் 1 மாணவர்களுக்கு முதல்வர் திறனாய்வு தேர்வு அக்.,7ல் நடக்கிறது. திறனறிவு தேர்வு அக்., 15 ல் நடப்பதால், இந்த 2 தேர்வுகளுக்கும் ஒரு வாரம் மட்டுமே இடைவெளி உள்ளது. ஒரு வார காலத்திற்குள் தமிழ் மொழி இலக்கிய தேர்வு எழுத மாணவர்கள் தயாராவது சிரமம். இதை கருத்தில் கொண்டு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வை ஒரு மாதத்திற்கு பின் நடத்த நடவடிக்கை எடுக்க அரசு தேர்வுகள் இயக்ககம் முன்வரவேண்டும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement