85,000 போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை செப். 26ல் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு
ராமநாதபுரம்:-அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வு பெற்ற 85 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 94 மாதங்களாக அகவிலைப்படி வழங்காததால் திருச்சியில் செப்.,26 ல் தொடர் காத்திருப்பு போராட்டம்நடத்த முடிவு செய்துள்ளனர்.
2015 முதல் இதுவரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை. அகவிலைப்படியை வழங்கும்படி தொடர்ந்து ஓய்வூதியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அகவிலைப்படியை வழங்க சென்னை உயர்நீதிமன்றமும் 2022 செப்.,ல் தீர்ப்பு அளித்துள்ளது. இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ள போக்குவரத்துக்கழக நிர்வாகம் வாய்தா வாங்கி காலம் கடத்தி வருகிறது.
இதுகுறித்து போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் நல அமைப்பு சார்பில் திருச்சியில் செப்., 26 ல் அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகம் முன் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.அமைப்பின் மாநில துணை செயலாளர் மணிக்கண்ணு கூறியதாவது:
2015 முதல் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் அகவிலைப்படி வழங்க மறுத்து வருகிறது. அகவிலைப்படி வழங்கினால் ஒருவருக்கு ரூ.5000 முதல் ரூ.10 ஆயிரம் வரை ஒரு மாதத்திற்கு கூடுதல் தொகை கிடைக்கும். அகவிலைப்படி வழங்க மறுத்தால் தொடர்ந்து போராடுவோம், என்றார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!