ரூ.975 கோடி வங்கி மோசடி மந்தனா நிறுவனம் மீது வழக்கு
புதுடில்லி, மஹாராஷ்டிராவில் இயங்கி வரும் மந்தனா என்ற நிறுவனம், வங்கியில் 975.08 கோடி ரூபாய் மோசடி செய்ததை அடுத்து, அந்த நிறுவனம் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும் மந்தனா என்ற ஜவுளி தொழிற்சாலை நிறுவனத்தின் அதிபர் மற்றும் செயல் இயக்குனர்கள், அங்குள்ள பரோடா வங்கியில் கடந்த, 2008ம் ஆண்டு முதல் கடன் பெற்றனர்.
ஆனால் இந்தக் கணக்கு, 2016ல் செயல்படாத சொத்தாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட தணிக்கையில், 975.08 கோடி ரூபாய் பணமோசடி நடந்தது தெரியவந்தது.
முறைகேடான பரிவர்த்தனைகள், நிதியை சொந்த விஷயங்களுக்கு பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் புருஷோத்தம் சகன்லால் மந்தனா, முன்னாள் நிர்வாக இயக்குனர் மணீஷ் பிஹாரிலால் மந்தனா உள்ளிட்டோர் மீது வங்கி நிர்வாகம், சி.பி.ஐ.,யில் புகார் செய்தது.
இதையடுத்து, மந்தனா தொழிற்சாலை நிறுவனத்தின் மீது வங்கி மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!