பாரம்பரிய கட்டடம் அருகே கட்டுமான பணி: தனித்துவம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு
ஊட்டி:உலக சுற்றுலா மையமான ஊட்டியை உருவாக்கி, 200 ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, அரசு சார்பில் கடந்த ஓராண்டாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கோடை சீசனில் சுற்றுலா பயணிகளுக்கு, ஊட்டியில் உள்ள பாரம்பரிய கட்டடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அந்த கட்டடங்களை பழமை மாறாமல் புனரமைக்க உத்தரவிட்ட அரசு, தேவையான நிதியும் ஒதுக்கி உள்ளது. அதில், ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகம், அரசு கலை கல்லுாரி, மாவட்ட தலைமை தபால் அலுவலகம், பழைய செசன்ஸ் கோர்ட் கட்டடங்கள், 150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்கவை.
இந்நிலையில், கலெக்டர் அலுவலக கட்டடத்தை ஒட்டி புதிய கட்டுமான பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதனால், கட்டடத்தின் தனித்துவம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மக்கள் கூறுகையில்,'ஊட்டியில் பாரம்பரிய கட்டடங்களை காக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இங்கு நடக்கும் கட்டுமான பணி, அரசின் உத்தரவை மீறப்படுவதாக உள்ளது. மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!