Load Image
Advertisement

தடை கேட்டு வழக்கு: பழனிசாமிக்கு அனுமதி

சென்னை:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி, டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால் பேச தடை விதிக்கக் கோரியும், 1.10 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் வழக்கு தொடர, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

நீலகிரி மாவட்டம், கோடநாடு தேயிலை எஸ்டேட் காவலரை படுகொலை செய்து, கொள்ளையடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கனகராஜ்; இவர்,சாலை விபத்தில்உயிரிழந்தார்.

இவரது சகோதரர் தனபால், வழக்கு தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டி, சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து, இந்த வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச, தனபாலுக்கு தடை விதிக்கவும், 1.10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.

அதோடு, இம்மனுவை தாக்கல் செய்ய, நீதிமன்றத்தின் அனுமதி கோரி, மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

மனு, நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜரானார். வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை ஏற்று, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பிரதான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement