Load Image
Advertisement

முருங்கை விலை உயர்வு கிலோ ரூ.13க்கு விற்பனை

 Moringa price hike, selling at Rs.13 per kg    முருங்கை விலை உயர்வு  கிலோ ரூ.13க்கு விற்பனை
ADVERTISEMENT
ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கிலோ ரூ.5 க்கு விற்ற முருங்கைக்காய் விலை ரூ.13 ஆக உயர்ந்தது.

இம்மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், தங்கச்சியம்மாபட்டி, அம்பிளிக்கை, கப்பலப்பட்டி, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, சாலைப்புதுார் பகுதிகளில் முருங்கை அதிகம் பயிரிடப்பட்டது. இதனால் சில வாரங்களாக மார்க்கெட்டிற்கு முருங்கைக்காய் வரத்து கணிசமாக அதிகரித்தது. விலை சரிவடைந்து கிலோ ரூ.5 க்கு விற்பனையானது.

இந்த விலை முருங்கையை பறித்தெடுக்கும் கூலிக்கு கூட கட்டுபடியாகாது என்பதால் சில விவசாயிகள் முருங்கைக்காயை பறிக்காமல் விட்டனர். சிலர் முருங்கை செடியை உழவு செய்து அழித்து விட்டனர். இதனால் மார்க்கெட்டிற்கு வரத்து குறைய துவங்கிய நிலையில் இதன் விலை தற்போது அதிகரித்து வருகிறது. கிலோ ரூ.5 க்கு விற்ற முருங்கை நேற்று ரூ.13 க்கு விற்பனையானது.

கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில், ''விலை குறைவால் முருங்கை செடிகள் பெரும்பாலான இடங்களில் அழிக்கப்பட்டு விட்டது. இதனால் வரத்து குறைந்து விலை ஏறத் தொடங்கியுள்ளது,''என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement