Load Image
Advertisement

மகளிர் உரிமை தொகை பணி வங்கி ஊழியர்கள் திணறல்

 Womens rights amount work bank employees stutter    மகளிர் உரிமை தொகை பணி வங்கி ஊழியர்கள் திணறல்
ADVERTISEMENT
பந்தலுார்;அரசின் மகளிர் உரிமை தொகை பெற, வங்கிகளில் மகளிர் கூட்டம் அதிகரித்தது.

மாநில அரசு சார்பில் மகளிர் உரிமை தொகை வாங்க தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு வங்கி கணக்கில் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.

நேற்று பெரும்பாலான பெண்கள் வங்கிகளுக்கு வந்து, தங்கள் வங்கி கணக்கில் உரிமை தொகை வரவு வைக்கப்பட்ட பணத்தை பெற ஊழியர்களிடம் முறையிட்டனர்.

இதனால், பந்தலுார் உட்பட மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட பிற வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. வங்கி ஊழியர்கள் பணி செய்ய முடியாமல் திணறினர். அதேபோல, இ-சேவை மையங்களிலும், மீண்டும் விண்ணப்பம் செய்ய திரளான பெண்கள் வந்திருந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement