Load Image
Advertisement

சென்னை அருகே பயங்கரம்: பா.ஜ., நிர்வாகி வெட்டிக்கொலை

 A BJP executive was hacked to death near Chennai    சென்னை அருகே பயங்கரம்: பா.ஜ., நிர்வாகி வெட்டிக்கொலை
ADVERTISEMENT
சென்னை:சென்னை அருகே பழைய பெருங்களத்துாரில், மர்ம நபர்களால், பா.ஜ., நிர்வாகி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

பழைய பெருங்களத்துார், குட்வில் நகரில் உள்ள காலி இடத்தில், வெட்டு காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, பீர்க்கன்காரணை போலீசாருக்கு, நேற்று காலை தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மோப்ப நாய் வரவைக்கப்பட்டது. அது அரை கி.மீ., துாரம் ஓடி நின்றது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், பழைய பெருங்களத்துார், காமராஜர் தெருவைச் சேர்ந்த பீரி வெங்கடேசன், 33, என்பது தெரியவந்தது.

அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்த பீரி வெங்கடேசன் மீது, 2015ல் நடந்த கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இவர், திருந்தி வாழ விரும்பி, பா.ஜ.,வில் சேர்ந்து, பெருங்களத்துார் - முடிச்சூர் மண்டல பட்டியல் அணி தலைவராக இருந்து வந்துள்ளார்.

இவரது எதிரிகள், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

நண்பர்களாக இருந்தவர்களுடன் ஏற்பட்ட முன் விரோதத்தில், இந்த கொலை நடந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் 'சிசிடிவி' கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், பீரி வெங்கடேசனை, மர்ம கும்பல், இரவில் காரில் கடத்தி சென்று, கொலை செய்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது.

தப்பிய காரை கண்டறிந்து, சிதம்பரம் அருகே கொலையாளிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement