ADVERTISEMENT
கொடைக்கானல்:கொடைக்கானல் மோயர் சதுக்கத்தில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி வன சுற்றுலா தலங்கள் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானலில் வன சுற்றுலாத்தலங்களாக மோயர் சதுக்கம், குணாகுகை, துாண்பாறை, பைன்பாரஸ்ட் உள்ளன.
ஒரு வாரமாக பேரிஜம் ஏரிப்பகுதியில் முகாமிட்டிருந்த நான்கிற்கும் மேற்பட்ட காட்டு யானைகளால் பேரிஜம் ஏரி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்திருந்தது.
நேற்று முன்தினம் இரவு மோயர் சதுக்கத்தில் உள்ள கடைகளில் உள்ள உணவுப் பொருட்களை யானைகள் சேதப்படுத்தின.
இதனால் மற்ற பொருட்களும் வெளியில் சிதறிக்கிடந்தன.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு , யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வன சுற்றுலாத்தலங்கள் நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!