வரும் 22ல் தமிழ் கனவு ; சைலேந்திரபாபு பங்கேற்பு
கோவை;கல்லுாரி மாணவர்களிடம் சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சிகுறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும், கோவை மாவட்டத்தில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கோவை வேளாண் பல்கலையில், 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை, 9:00 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில், 'எனக்குள் ஒரு தலைவன்' என்ற தலைப்பில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சைலேந்திரபாபு பேசுகிறார்.
பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ் பெருமிதம் ஆகிய கையேடு வழங்கப்படும்.
புத்தகக்காட்சி, நான் முதல்வன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வங்கி கடனுதவி ஆலோசனை, சுய உதவிக்குழுவினர் தயாரிப்புகள் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!