ADVERTISEMENT
பெங்களூரு, சூரியன் - பூமிக்கு இடையில் உள்ள, 'எல்1' எனப்படும், 'லாக்ராஞ்சியன்' புள்ளியை நோக்கிய பயணத்தை 'ஆதித்யா எல்1' விண்கலம் வெற்றிகரமாக துவக்கி உள்ளது.
வெற்றி
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, கடந்த 2-ம் தேதி பி.எஸ்.எல்.வி., சி-57 ராக்கெட் வாயிலாக, 'ஆதித்யா எல்1' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
விண்கலம் பூமியை சுற்றிவரும் புவி வட்ட பாதையின் உயரம் கடந்த, 3, 5, 10 மற்றும் 15ம் தேதிகளில் நான்கு முறை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டது.
குறைந்தபட்சமாக, 265 கி.மீ., தொலைவும், அதிகபட்சமாக ஒரு லட்சத்து, 27 ஆயிரத்து, 973 கி.மீ., தொலைவும் உடைய சுற்றுவட்ட பாதையில், 'ஆதித்யா எல்1' விண்கலம் பூமியை சுற்றி வந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை ஐந்தாவது முறையாக உயர்த்தப்பட்டது.
சுற்றுவட்ட பாதை
கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் இந்த பணியை மேற்கொண்டனர்.
அப்போது, பூமியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து விடைபெற்ற, 'ஆதித்யா எல்1' விண்கலம், சூரியன் - பூமிக்கு இடையே உள்ள, 'எல்1' எனப்படும், 'லாக்ரேஞ்சியன்' புள்ளியை நோக்கிய பயணத்தை நேற்று வெற்றிகரமாக துவக்கியது.
அடுத்த, 110 நாட்கள் பயணித்து, பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான, 'எல்1' புள்ளியில், விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்படும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!