Load Image
Advertisement

இயந்திர கொள்முதலில் முறைகேடு விவகாரம்; ரூசா கமிட்டி பாரதியார் பல்கலையில் விசாரணை

கோவை;பாரதியார் பல்கலையில், 'என்.ஜி.எஸ்.,' (நெக்ஸ் ஜெனரேசன் சீக்வென்சர்) என்று கூறப்படும் இயந்திரம் கொள்முதல் செய்ததில், 1 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில், ரூசா குழு அதிகாரிகள் நேற்று காலை முதல் மாலை வரை, விசாரணையில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் ரூசா திட்டத்தின் கீழ், பல்கலை கல்லுாரிகளுக்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், ஆராய்ச்சிகள் சார்ந்த கட்டமைப்பு மேம்படுத்தவும் தொடர்ந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாரதியார் பல்கலையில், கேன்சர் சார்ந்த பலதரப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிதியின் அடிப்படையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், என்.ஜி.எஸ்., இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டது.

இக்கொள்முதல் செயல்பாடுகளில், 'டெண்டர்' நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என தெரிகிறது. இயந்திரம் நேரடியாக உற்பத்தி செய்பவர்கள் இருந்தும், நேரடி டீலர் கூட அல்லாத ஓர் டீலரிடம், பல்கலை நிர்வாகம் இயந்திரத்தை கொள்முதல் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்ததால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இயந்திரம் கொள்முதல் செய்ததற்கான தொகை வழங்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் கடந்தும், இதுவரை இயந்திரத்திற்கான தொகை, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கவில்லை.

இதுகுறித்து, பல்கலை தரப்பில் நிர்வாகிகள் கூறுகையில், 'ரூசா குழு பல்கலை பதிவாளர், புகார் அளித்த நபர்கள், கொள்முதல் செயல்பாடுகளை மேற்கொண்ட முன்னாள் சிண்டிகேட் பெண் உறுப்பினர் அனைவரிடமும், விசாரணை மேற்கொண்டுள்ளது. விசாரணை அறிக்கை வெளியான பின்பே, எதுவும் உறுதியாக கூற இயலும்' என்றனர்.

ரூ.1 கோடி முறைகேடு



இயந்திரத்தின் தற்போதைய விலையே, 1.94 கோடி ரூபாய் என்ற நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 2.52 கோடி ரூபாய்க்கு இந்த இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தவிர, அப்போதைய விலை, 1.30 ரூபாய் கோடி என்பதே உண்மை நிலவரம். முன்னாள் துணைவேந்தர் தலைமையில் இம்முறைகேடு நடந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு இயந்திரத்திலேயே இவ்வளவு முறைகேடு என்றால், மொத்தமாக வழங்கப்பட்ட 50 கோடி ரூபாய், பல்கலையின் வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு இருக்குமா என்பது கேள்விக்குறியே!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement