Load Image
Advertisement

கொடை மலைப்பகுதியில் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 Rains affect normal life in Kodai hills    கொடை மலைப்பகுதியில் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADVERTISEMENT
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதிகளில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இம்மலைப்பகுதிகளில் சில தினங்களாக கனமழை பெய்கிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக கொடைக்கானலில் 55 மி. மீ., மழை பதிவானது. இங்கு நேற்று மதியம் 2: 00 மணிக்கு தொடங்கிய மழை இரவு 7:00 மணி வரை இடைவிடாது பெய்து கொண்டே இருந்தது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் முடங்கினர்.அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. தாழ்வான பகுதியில் பயிரிடப்பட்ட காய்கறிப்பயிர்கள் நீரில் மூழ்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் மேல்மலை பகுதி தாண்டிக்குடி கீழ்மலைப்பகுதிகளில் 5 மணி நேரத்திற்கு மேலாக தொடர் மின்தடை ஏற்பட்டது.

பூம்பாறை பகுதியில் கனமழைக்கு மரம் சாய்ந்து இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. நெடுஞ்சாலைத்துறையினர், பொதுமக்கள் இணைந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement