நிதி நிறுவன மோசடி வழக்கில் ரூ.6 கோடி திரும்ப பெற அழைப்பு
கோவை;நிதி நிறுவனம், ஆறு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், டெபாசிட் தொகையை திரும்ப பெற்று செல்ல, புகார்தாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கோவை, காந்திபுரத்தில் செயல்பட்டு வந்த சீனிவாசப்பெருமாள் பைனான்ஸ் நிறுவனம், 654 பேரிடம், ஆறு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு, கோவை டான்பிட் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
வழக்கு நிலுவையில் இருந்த போது, மோசடி செய்த பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அதன்படி, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு, மோசடி பணம் ஆறு கோடி ரூபாயை, நிதி நிறுவன உரிமையாளர்கள் கோர்ட்டில் திரும்ப செலுத்தினர். அந்த தொகையினை பாதிக்கப்பட்ட டெபாசிட்தாரர்கள், உரிய ஆவணங்கள் செலுத்தி, பணத்தை பெற்றுச்செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால், 48 பேர் மட்டும் பணத்தை பெற்று சென்றனர்.
இதுவரை பணத்தை பெறாத டெபாசிட்தாரர்கள், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் உறுதி கடிதம் பெற்று, உரிய ஆவணங்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். ஆவணங்களை வழங்கும் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை பிரித்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!