ADVERTISEMENT
நாகப்பட்டினம்:நாகையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் முதலாம் குலோத்துங்க சோழர், 21வது ஆட்சி காலத்தில், மலேயா, ஜாவா, சுமத்ரா போன்ற இந்தோனேஷிய தீவுகளை ஆட்சி செய்த மாற விஜயதுங்கவர்மனுக்கும், சோழர்களுக்கும் அரசியல் மற்றும் வர்த்தக ரீதியான உறவு இருந்தது.
அப்போது, விஜயதுங்க வர்மனால் நாகையில், 'புத்த விஹாரம்' கட்டப்பட்டு, 'ராஜராஜ பெரும்பள்ளி' என அழைக்கப்பட்டது. இதற்கு சூடாமணி விஹாரம் என்ற பெயரும் உள்ளது.
சோழ பேரரசன் ஸ்வஸ்திஸ்ரீ ராஜராஜ தேவர் இறப்புக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழர், 600 ஏக்கர் நிலத்தை இந்த புத்த விஹாரத்திற்கு, 'இந்த பூமி இருக்கும் வரை சொந்தம்' என்று எழுதி வைத்துள்ளார்.
பின், கிறிஸ்துவ சபையினர், 1861ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியினரிடம் இருந்த புத்த விஹாரத்தை வாங்கி, 1867ல் இடித்துள்ளனர். அப்போது இங்கிருந்த, 350க்கும் மேற்பட்ட தொன்மையான சிலைகள், பிரிட்டிஷ் மியூசியத்திற்கு சென்றுள்ளன.
கடந்த, 2003க்கு முன், 133 செ.மீ., உயரமுள்ள புத்தர் சிலை நாகையில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு கடத்தப்பட்டுள்ளது.
பின், 2008ல் பரிமாற்ற அடிப்படையில், சிங்கப்பூர் ஏசியன் சிவிலிசேஷன் மியூசியத்தில் சில ஆண்டுகள் வைக்கப்பட்டு, திரும்பவும் நியூயார்க் சென்றுள்ளது. இதன் மதிப்பு, 17.50 கோடி ரூபாய் என, விலை வைத்துள்ளனர்.
கடத்தல் விவகாரம், 2020ல் தெரிய வருகிறது. கடத்தலில் தொடர்புடைய அனைவரும் தற்போது உயிரோடு உள்ளனர். சிலையை மீட்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!