புதிய வளர்ச்சி திட்டம் உருவாக்க திட்டக்குழு கூட்டத்தில் விவாதம்
கோவை;'கோவை மாவட்ட வளர்ச்சிக்கு, திட்டக்குழுவில் விவாதித்து, புதிய வளர்ச்சி திட்டம் உருவாக்கப்படும்' என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை ஒருங்கிணைக்கவும், மாவட்டம் முழுவதற்கும் ஒட்டுமொத்தமாக வரைவு வளர்ச்சி திட்டம் தயாரிக்கவும், மாவட்ட திட்டக்குழு உருவாக்கப்பட்டு உள்ளது.
மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள், செயல் திட்டங்கள் உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொள்ளும். இதன் இரண்டாவது கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டை வழங்கப்பட்டது.
திட்டக்குழு தலைவரான, மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி பேசுகையில், ''திட்டக்குழு உறுப்பினர்கள் வழங்கிய, 84 கோரிக்கைகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அத்துறையினர் திட்டக்குழுவுக்கு தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
திட்டக்குழு துணை தலைவரான, கலெக்டர் கிராந்திகுமார் பேசுகையில், ''புதிய வளர்ச்சி திட்டம் தயார் செய்வதற்கு விவாதித்து, பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கும்போது, தேவையானவை பரிந்துரைக்கப்படும்.
இதன் மூலம், சிறந்த திட்டம் தயாரிக்க உதவியாக இருக்கும். மூன்று மாதத்துக்கு ஒருமுறை கூட்டம் நடத்தப்படும்.
உறுப்பினர்கள் கூறிய கோரிக்கைகள் மீது, எடுத்த நடவடிக்கையை அடுத்த கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம், வளர்ச்சி திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். இதற்கு அனைத்து துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என்றார்.
கூட்டத்தில், மாவட்ட திட்ட அலுவலர் பாஸ்கர், உறுப்பினர்கள் கோபால்சாமி, கார்த்திக் செல்வராஜ், அப்துல்காதர் உட்பட பலர் பங்கேற்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!